4000 ரூபாய்க்கு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் விற்பனை செய்ய முகேஷ் அம்பானி திட்டமிட்டு வருகிறார்..!
தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவித்து வருக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தங்களது பயனர்களுக்காக புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டெலிகாம் சேவை துறையில் புதிய உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில் 5G தொழில்நுட்பத்தை உருவாக்கவும், அதைப் பிற நாடுகளுக்கு விற்பனை செய்யவும் ஏற்கனவே தனது பணியைத் துவங்கியுள்ள நிலையில், தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதாவது, வெறும் 4,000 ரூபாய்கு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் விற்பனை செய்ய முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவசர அவசரமாக 20 கோடி ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களிடம் ரிலையன்ஸ் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ALSO READ | ‘Mi Store on Wheels’ திட்டத்தை அறிமுகம் செய்த சியோமி... இதனால் என்ன பயன்...
இந்த ஸ்மார்ட்போன்களில் ரிலையன்ஸ் ஜியோவின் குறைந்த கட்டணத்திலான திட்டங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. முகேஷ் அம்பானியின் புதிய திட்டத்தால் உள்நாட்டு நிறுவனங்களான டிக்ஸன் டெக்னாலஜீஸ், லாவா, கார்பன் மொபைல்ஸ் ஆகிய நிறுவனங்களின் தொழிலுக்கு ஊக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 4,000 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் என்பது சாமானியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இந்த 4000 ரூபாய் ஸ்மார்ட்போன் திட்டம், இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் பல்வேறு சீன நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். அதிலும் முக்கியமாகச் சீனாவின் சியோமி நிறுவனத்தின் ஆதிக்கம் ஜியோ ஸ்மார்ட்போன் அறிமுகத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.