பணம் இல்லையா? ‘Scan now and pay later’ வசதியை வழங்குகிறது Vivify!!

கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 3 கோடி ரூபாய் பரிவர்த்தனைகளுக்கு 30,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஏற்கனவே Vivify-யின் கிரெடிட்-டு-பே ஆப்ஷனை பயன்படுத்தியுள்ளனர்.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 21, 2020, 05:11 PM IST
  • Vivifi India Finance, சமீபத்தில் Flexpay என்ற பேமண்ட் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கடந்த இரண்டு மாதங்களில் 30,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஏற்கனவே Vivify-யின் கிரெடிட்-டு-பே ஆப்ஷனை பயன்படுத்தியுள்ளனர்.
  • 400 வாடிக்கையாளர்களுடன் பிரைம் வாடிக்கையாளர்களுக்கும் தொடர்பு இல்லாத கிரெடிட் கார்டு அனுபவத்தை வழங்க FlexiPay தயாராக உள்ளது.
பணம் இல்லையா? ‘Scan now and pay later’ வசதியை வழங்குகிறது Vivify!!

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட வங்கி சாராத கடன் வழங்குநரான Vivifi India Finance, சமீபத்தில் Flexpay என்ற பேமண்ட் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது யூனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸில் (UPI) கடன் பெற அனுமதிக்கிறது.

பயனர்களிடம் வங்கி கணக்கிலோ அல்லது ரொக்கமாகவோ பணம் இல்லையென்றால், அப்படிப்பட்ட தருணங்களில், Flexpay வாடிக்கையாளர்களுக்கு ‘Scan Now and Pay Later’ அதாவது, ‘இப்போது ஸ்கேன் செய்து பின்னர் கட்டணம் செலுத்தும்’ வசதியை அளிக்கின்றது. NBFC, "எந்தவொரு UPI QR குறியீடு அல்லது UPI ஐடியையும் ஸ்கேன் செய்து இந்த கட்டண பேமெண்ட் ஆப்ஷன் ஆஃப்லைனில் வாங்குவதற்கும் உதவுகிறது.” என்று குறியுள்ளது. சிறிய மளிகை கடைகள் முதல் பெரிய சில்லறை விற்பனையாளர்கள் வரை அனைத்து வணிகர்களும் இதைப் பயன்படுத்தலாம்.

கிரெடிட் கார்டு (Credit Card) இல்லாத 300 மில்லியன் இந்தியர்களுக்கு இந்த வசதி பிரத்தியேகமான உதவியாக இருக்கும். UPI QR குறியீடு மற்றும் UPI ID -யையும் ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்கள் ஆஃப்லைனில் வாங்குவதற்கு வசதியளிக்கும் முதல் இந்திய ப்ராடெக்டாகும் இது. இது இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பரிவர்த்தனை மாதிரியாகும்.'

ALSO READ: Online-ல் உங்கள் வருமானத்தை அதிகரிக்க வந்து விட்டது புதிய App OnZoom: விவரம் உள்ளே!!

கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 3 கோடி ரூபாய் பரிவர்த்தனைகளுக்கு 30,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஏற்கனவே Vivify-யின் கிரெடிட்-டு-பே ஆப்ஷனை பயன்படுத்தியுள்ளனர். 40 கோடிக்கும் அதிகமான 'குறைவான சேவை வழங்கப்பட்ட வாடிக்கையாளர்கள்' மற்றும் முக்கிய வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

"குறைவான சேவைகளைப் பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான எங்கள் இலக்கின் முதல் படியாக, நாங்கள் இந்த வசதியை 100,000 வாடிக்கையாளர்கள் வரை எடுத்துச் செல்ல விரும்புகிறோம்.” என நிறுவனம் கூறியுள்ளது.

குறைவான சேவைகளைப் பெற்று வரும் 400 வாடிக்கையாளர்களுடன் பிரைம் வாடிக்கையாளர்களுக்கும் தொடர்பு இல்லாத கிரெடிட் கார்டு அனுபவத்தை வழங்க FlexPay தயாராக உள்ளதாக கூறியுள்ளது.  

ALSO READ: ரோல்ஓவர் வசதியுடன் புதிய ப்ரீபெய்டு திட்டங்கள் அறிமுகம் செய்த Vi!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News