பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் திமுக பேருராட்சித் தலைவர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூறி மற்ற திமுக கவுன்சிலர்கள் மற்றும் கவுன்சிலர்களின் கணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் தமிழரசனிடம் கேட்கலாம்.
மாணவர்கள் ஏன் இத்தனை துயரமான முடிவைத் துணிந்து எடுக்கிறார்கள்? மருத்துவர் என்னும் பெருங்கனவைச் சுமந்து வளர்ந்த அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகள் மீது நீட் என்னும் பெரும் பாறாங்கல்லை வைத்து நசுக்கிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்க்கிறது மாநில அரசு.
திமுக கட்சி சார்பான அனைத்து நிகழ்ச்சிகளும் 7 நாட்கள் ஒத்தி வைப்பு மற்றும் ஒருவாரம் திமுக கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அக்கட்சியின் தலைவர் மு,க. ஸ்டாலின் வேண்டுகோள்.
“தமிழகம் சமூகநீதியின் தொட்டில்; அதை நீர்த்துப்போகச் செய்யும் பணியில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபடுவதை திமுக ஒருக்காலும் அனுமதிக்காது” என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.