விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வழிமுறையை வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
விவசாயகளின் தற்கொலைக்கு வழங்கப்படும் இழப்பீட்டை முறைப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
மத்திய அரசு தமிழக அரசியலின் உள் விவகாரங்களில் தலையிடாது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து டெல்லையில் இன்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:- தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பம் அதிமுகவின் உள்கட்சி விவகாரம். இதில் மத்திய அரசு தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. இப்பிரச்சனையானது மாநில விவகாரத்தின் கீழ் வருகிறது. இதில் ஏன் மத்திய அரசு தலையிட வேண்டும். அதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது. அதிமுகவில் நிலவும் பிரச்சனையை அதன் எம்எல் ஏக்கள் தான் தீர்க்க முடியும் என்றார்.
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூசன், பத்மபூசன் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசால் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் பின்வருமாறு:-
காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் நீர் இருப்பு, நீர்வரத்து ஆகியவை குறித்த உண்மை நிலவரத்தை கண்டறிய நிபுணர்கள் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அத்துடன் அந்த குழு 17-ம் தேதிக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
ரகுராம் ராஜனின் மூன்றாண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிப்பாரா? இல்லையா? என்று விவாதங்கள் நடைப்பெற்றன. இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு ரகுராம்ராஜன் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் தாம் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிக்க விரும்ப வில்லை. திரும்ப அமெரிக்காவுக்கே செல்ல இருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கடல் சார்ந்த திட்டங்களுக்காக ரூ.90,000 கோடி முதலீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
காணொளியில் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது நிதின் கட்கரி இதைத் தெரிவித்தார்.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி சதவீதம் சற்று குறைந்திருக்கிறது.
கடந்த வருடம் மொத்த 97.32 சதவீதமாக இருந்தது.
இந்த வருடம் மொத்த தேர்ச்சி சதவீதம் 96.21 ஆகும்.
மாணவியர் 96.36 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளனர்.
மாணவர்கள் 96.11 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவீதத்தில் திருவனந்தபுரம் முதலிடத்தினை பிடித்துள்ளது அதன் சதவீதம் 99.87.
99.69 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தை சென்னை பெற்றுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. அதனை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பேரணி நடத்தி வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசு பொதுமக்களுக்கா வினாடி-வினா போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5 நிமிடங்களில் 20 கேள்விகளுக்கு கேட்கப்படும் அதற்க்கு சரியாக பதில் அளிப்போருக்கு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வெற்றி சான்றிதழ் பெறும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு மருத்துவ பொது நுழைவுத் தேர்வை இந்த கல்வியாண்டில் நிறுத்தி வைக்கும் வகையில் மத்திய மந்திரிசபை குழு பரிந்துரை செய்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 24-ந் தேதி ஒப்புதல் அளித்தார்.
கேரள கடல் எல்லையில் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இத்தாலி வீரர்கள் 2 கேரளா மீனவர்களை சுட்டுக்கொன்றனர். இதனால் இத்தாலி மாலுமிகளான இரண்டு பேர் மிஸிமிலினோ லட்டோர் மற்றும் சல்வடோர் கிரோன் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழு கூடியது. அக்குழுவில் நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கௌண்டர்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதை பற்றி விவாதங்கள் நடைபெற்றது. அதற்கான சட்ட திருத்த மசோதா நிறைவேற்றுதல் பற்றி ஆலோசனை நடைபெற்றன.
இன்று டெல்லியில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இந்திய அளவிலான மருத்துவ பொது நுழைவு தேர்வை ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
விரிவாக பார்போம்:
மத்திய அரசு ‘புவியமைப்பு தகவல் ஒழுங்குமுறை மசோதா’ தயாரித்துள்ளது. இதன் மூலம் இந்திய எல்லை வரைபடத்தை தவறாக சித்திரித்து வெளியிடுவோர்க்கு சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.
அதாவது நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் இந்திய எல்லை வரைபடத்தை தவறாக சித்திரித்து வெளியிட்டு வருகின்றன. இதைத் தடுக்கும் நோக்கத்தில் வரைபட மசோதா சட்டம் இயற்றப்படுகிறது. சட்டம் இயற்றிய பின்பு இந்திய எல்லை வரைபடத்தை தவறாக சித்திரிக்கும் தனிநபரோ அல்லது அமைப்புக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.100 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.
மருத்துவம் சார்பாக நடைபெறும் நுழைவுத் தேர்வை எதிர்த்து மாநில அரசுகள் வழக்கு தொடர்ந்தன. ஆனால் மருத்துவ நுழைவுத் தேர்வுகளை மாநில அரசுகள் நடத்த முடியாது எனவும், மத்திய அரசுக்கு தான் நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி எனவும், நுழைவுத் தேர்வுகளின் மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்வு ஜூலை 24ம் தேதி வைத்துக்கொள்ளலாம் அல்லது தேர்வுகளை வேற தேதிக்கு மாற்றிக்கொள்ள மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ அதிகாரம் உள்ளது. மேலும் இந்த விசியத்தில் உச்சநீதி்மன்றம் குறிக்கிடாது என்று நீதிபதிகள் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.