ADMK : உள்கட்சி மோதலில் ஈடுபட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கை 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவறான அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதற்கு இழப்பீடு கோரி நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை நீக்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் பிற மதத்தினர் பங்கேற்க தடை விதிக்க வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மாமூல் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, நீலகிரியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யக்கோரி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
Karthick Gopinath : சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்ததாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் கார்த்திக் கோபிநாத்தின் தனிப்பட்ட கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தென்கலையினர் மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்த உதவி ஆணையர் உத்தரவையும், வடகலை பிரிவினரும் பாட அனுமதித்த தனி நீதிபதி உத்தரவையும் நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறையினருக்கு சில வழிகாட்டு விதிமுறைகளையும் வகுத்துள்ளது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதால் அவர் மீண்டும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மொழிக்காக எப்போதும் முதலாவதாக வருபவர்கள் தமிழர்கள் என பெருமிதம் தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, தற்போதைய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடுவது குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என குறிப்பிட்டார்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.