பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று அமர்நாத் கோயிலுக்கு செல்கிறார் ராஜ்நாத் சிங்

லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஜூலை 18) அமர்நாத் கோயிலுக்குச் செல்வார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 18, 2020, 10:13 AM IST
  • தேசிய நெடுஞ்சாலை 44-ல், அமர்நாத் புனித யாத்திரையை பயங்கரவாதிகள் குறி வைக்க முயற்சிப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
  • இந்தியாவும் சீனாவும் எல்லை மோதலில் ஈடுபட்டுள்ள பிராந்தியத்தில், இராணுவமும் விமானப்படையும் தங்கள் போர் தயார்நிலையைக் காட்டியன.
  • கடந்த சில மாதங்களாக பாக்கிஸ்தான் போர் நிறுத்த மீறல்கள் அதிகரித்து வருகின்றன.
பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று அமர்நாத் கோயிலுக்கு செல்கிறார் ராஜ்நாத் சிங்  title=

புதுடில்லி: லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் (Defence Minister) ராஜ்நாத் சிங் (Rajnath Singh) இன்று (ஜூலை 18) அமர்நாத் கோயிலுக்குச் (Amarnath Temple) செல்வார். தேசிய நெடுஞ்சாலை 44 இல், அமர்நாத் புனித யாத்திரையை  (Amarnath Yatra) பயங்கரவாதிகள் குறி வைக்க முயற்சிப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ள நேரத்தில் அமர்நாத் கோயிலுக்கு அவர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 ஆவது செக்டரின் தளபதி பிரிகேடியர் வி.எஸ்.தகூர் கூறுகையில், "பயங்கரவாதிகள் யாத்திரையை குறிவைக்க தங்களால் முடிந்தவரை முயற்சிப்பார்கள். என்.எச் 44 தொடர்ந்து உணர்திறன் கொண்டதாக இருக்கிறது, ஏனென்றால் அது வடக்கு பாதைகளுக்கு செல்ல யாத்திரிகள் பயன்படுத்தும் பாதை." என்று கூறினார். அமர்நாத் யாத்திரை எந்தவித இடையூறும் இன்றி அமைதியாக நடத்தப்படுவதை உறுதி செய்வதில் இராணுவம் உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.

ஜூலை 17 அன்று, தனது பயணத்தின் முதல் நாளில், ராஜ்நாத் லடாக்கில் (Ladakh) உள்ள ஸ்டக்னாவுக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் களத் தளபதிகளுடன் தொடர்பு கொண்டார். LAC –ல் உள்ள நிலைமையை ஆய்வு செய்தார். தாக்குதல் ஹெலிகாப்டர்கள், டாங்கிகள், காலாட்படை போர் வாகனங்கள் மற்றும் தரை கமாண்டோக்கள் ஆகியோர் நடத்திய ஒரு இராணுவப் பயிற்சியை அவர் பார்வையிட்டார்.

ALSO READ:எல்லை பாதுகாப்பு ஆகிய பகுதிகளை ஆய்வு செய்ய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் லடாக் வருகை

இந்த பயிற்சியில், இந்தியாவும் சீனாவும் கடுமையான எல்லை மோதலில் ஈடுபட்டுள்ள பிராந்தியத்தில், இராணுவமும் விமானப்படையும் தங்கள் போர் தயார்நிலையைக் காட்டியன. ஸ்டாக்னாவில் நடந்த பயிற்சியில் ஏராளமான தரை கமாண்டோக்கள், டாங்கிகள், பி.எம்.பி காலாட்படை போர் வாகனங்கள், அப்பாச்சி, ருத்ரா மற்றும் மி -17 வி 5 ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன.

வெள்ளிக்கிழமை மாலை, சிங் தனது பயணத்தின் இரண்டாம் கட்டத்திற்காக ஸ்ரீநகருக்கு சென்றார். 15 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். ராஜு, அவருக்கு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (LoC) உள்ள நிலைமை பற்றியும் இங்கு மேற்கொள்ளப்பட்ட  வெற்றிகரமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பற்றியும் விளக்கினார்.

பின்னர் வெள்ளிக்கிழமை மாலை, பாதுகாப்பு அமைச்சர் ஒரு உயர் மட்ட பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) லெப்டினன்ட் கவர்னர் ஜி.சி.முர்மு, ஜெனரல் ராவத், ஜெனரல் நர்வானே, லெஃப்டினண்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு, ஜம்மு காஷ்மீற் காவல்துறையின் டைரக்டர் ஜெனரல் தில்பாக் சிங் மற்றும் பாதுகாப்புப் படை, சிவில் ஏஜன்சிகள் மற்றும் உளவுத் துறையின் மேலும் பல மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த சில மாதங்களாக பாக்கிஸ்தான் போர் நிறுத்த மீறல்கள் அதிகரித்து வருகின்றது.

இந்த மாத தொடக்கத்தில், LoC மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் படைகள் நடத்தும் போர் நிறுத்த மீறல்கள் தொடர்பாக இந்தியா பாகிஸ்தானுடன் கடும் போராட்டத்தை நடத்தியது. ஜம்மு-காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக இவை நடத்தப்பாடுகின்றன என அதிகாரிகள் கூறினர்.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ஜூன் வரை பாகிஸ்தான் படைகள் நடத்திய தூண்டப்படாத போர் நிறுத்த மீறல்களின் 2,432 க்கும் மேற்பட்ட சம்பவங்களில் பதினான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 88 பேர் காயமடைந்தனர்.

இதைப் பற்றி இந்தியா பல முறைகளில் பாகிஸ்தானிடம் கூறியும் பாகிஸ்தான் படைகள் அத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News