நாடாளுமன்றத்தின் மழைக்கால அமர்வில், தொழிலாளர் சீர்திருத்தங்கள் தொடர்பான மூன்று மசோதாக்களை மத்திய அரசு மக்களவையில் (Lok Sabha) அறிமுகப்படுத்தியுள்ளது. சமூக பாதுகாப்பு குறியீடு 2020 (Social Security Code 2020) இதில் அடங்கும்.
சமூகப் பாதுகாப்புக் குறியீட்டில் பல புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விதிகளில் ஒன்று Gratuity பற்றியது. ஐந்தாண்டுகள் வேலை செய்தால் தான் Gratuity என்பதற்கு பதிலாக ஒரு வருடத்திலும் Gratuity –ஐ பெறலாம் என்று இதில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ: Gratuity: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள்
சம்பளத்துடன் கிடைக்கும் Gratuity-ன் பலன்
புதிய விதிகள் பற்றிய விவரங்கள் Social Security Code 2020 இல் கொடுக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மக்கள் இதன் மூலம் நேரடியாக பயனடைவார்கள். நிலையான கால அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அவர்களது பணி நாட்கள் அடிப்படையில் Gratuity-க்கான பயன் கிடைக்கும்.
இதற்கு ஐந்து ஆண்டுகள் அதே அலுவலகத்தில் பணி புரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எளிதான மொழியில் கூற வேண்டுமானால், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்துடன் Gratuity-ன் பலனும் கிடைக்கும். ஒப்பந்தம் எவ்வளவு காலம் இருந்தாலும், அவர்களுக்கு சம்பளத்தின் அடிப்படையில் Gratuity வழங்கப்படும்.
சட்டம் இயற்றப்பட்டால் நன்மை கிடைக்கும்
சமூக பாதுகாப்பு குறியீடு 2020 இன்னும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அங்கீகரிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படட் பின்னர்தான் இது சட்டமாக இயற்றப்படும். இது சட்டமாக இயற்றப்பட்ட பின்னரே, அதன் அனைத்து தகவல்களும் வெளிப்படும். இந்த புதிய முறைகளில் இருக்கப்போகும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து நமக்கு பின்னர் தெரிய வரும்.
ALSO READ: ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வழங்கும் indian post... நன்மைகள் என்ன?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR