கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின், எடியூரப்பா தலைமையிலான புதிய பாஜக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றது. கர்நாடகாவின் முதலமைச்சர் எடியூரப்பா பதவி ஏற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எடியூரப்பா பதவி விலகக்கூடும் என தொடர்ந்து தகவல்கள் சில நாட்களாக பரவி வருகிறது.
சிறப்பு ஒதுக்கீடாக தமிழகத்துக்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட் வெண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.
நாடு கொரோனாவுக்கு எதிராக போராடி வரும்போது, மருத்துவர்கள் இரவும் பகலும் கடினமாக உழைத்து மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளனர். இதனால் தான் டாக்டர்கள் கடவுளின் மற்றொரு வடிவம் என்று கூறப்படுகிறார்கள். அவர்களை அப்படி அழைப்பது தான் சிறந்தது என்றார்.
சுமார் இரண்டு ஆண்டுகளில் முதன் முறையாக, ஜம்மு-காஷ்மீரின் அரசியல் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஜம்மு காஷ்மீர் அரசியலுக்கும் புது தில்லிக்கும் இடையில் இருந்த ஒரு வித மவுனத்தை கலைத்துள்ளார் பிரதமர் மோடி.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, ஆன்லைன் மூலம் உரையாற்றினார். கொரோனா பரவல் இருந்தாலும், சர்வயோக தினம் கொண்டாடுவதில் மக்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். பார்க்கப்போனால், இந்த நோய்த்தொற்று யோகா மீதான உலகத்தின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமையன்று கடலோர ரிசார்ட்டில் நடைபெறும் மூன்று நாள் உச்சி மாநாட்டிற்காக கூடினார்கள்.
G7 Summit: கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பிரிட்டனில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.
ஜி 7 உச்சிமாநாட்டிற்கு இங்கிலாந்து தலைமை தாங்கும் நிலையில், மூன்று முக்கியமான அமர்வுகளில் பிரதமர் மோடியின் உரை உலக அளவில் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
இன்று, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனா 2.0 (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) இன் விரிவாக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்மூலம் 80 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பயனடைவார்கள்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, மத்திய அரசு மாணவர்களுக்கான ஒரு மிகப்பெரிய அறிவிப்பை அளித்தது. CBSE பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படாது என்றும், இதற்கு பதிலாக மதிப்பீட்டிற்கான ஒரு மாற்று வழி கண்டறியப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ (CBSE) 12வது பொது தேர்வுகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.