திராவிட மாடல் அரசின் முகமாக இருக்கும் திட்டங்கள் குறித்து மாநில அளவிலும், தேசிய அளவிலும் கட்டுரைகள் வெளிவர வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக அறிவித்து மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டிருக்கும் உத்தரவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.
தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப்பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து 14 மாதங்களே ஆன சூழ்நிலையில் இதுவரை 20,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடியுமென உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி பணியாளர் தேர்வு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு சாதகமான முடிவெடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என தலைமைச் செயலர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.