விமானத்தில் கை தவறி கொதிக்கும் தேநீரை கொட்டியதற்கு கொடுத்த விலை ₹58 லட்சம்

விமான பயணத்தில், தவறுதலாக கொதிக்கும் தேநீரை கொட்டியதால், பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளார் ஒரு விமானப் பணியாளர். கைதவறியது, அவரது பாக்கெட்டிற்கு பெரும் வேட்டு வைத்து விட்டது.  

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 21, 2021, 01:43 PM IST
  • விமானம் டப்ளினிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்று கொண்டிருந்தது
  • துருக்கிய ஏர்லைன்ஸுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது
  • நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் குறித்த தீர்ப்பு இப்போது வந்துள்ளது
விமானத்தில் கை தவறி கொதிக்கும் தேநீரை கொட்டியதற்கு கொடுத்த விலை ₹58 லட்சம்

விமான பயணத்தில், தவறுதலாக கொதிக்கும் தேநீரை கொட்டியதால், பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளார் ஒரு விமானப் பணியாளர். கைதவறியது, அவரது பாக்கெட்டிற்கு பெரும் வேட்டு வைத்து விட்டது.

இந்த சம்பவம் நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். ‘Paddle Your Own Kanoo’  என்ற துருக்கி விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டப்ளின் என்ற இடத்திலிருந்து இஸ்தான்புல்லிற்கு (Dublin to Istanbul) சென்ற விமானத்தில் ஏற்பட்ட சமப்வம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த விமானத்தில் நடந்தது என்னவென்றால், விமானத்தின் பணியாளர் ஒருவர், அனைவருக்கு தேநீர் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, எம்ரே கரக்யா என்பவருக்கு தேநீர் வழங்கிய போது, அவரது கை தவறி, தேநீர் பயணியின் காலில் கொட்டி விட்டது. 

இதனால் அவரது காலில் ஒரு வடு ஏற்பட்டது. இந்த விபத்து நடந்தபோது, ​​பாதிக்கப்பட்டவரின் வயது 13. விபத்து குறித்து தெரிந்ததும், சிறுவனின் தாய் துருக்கி ஏர்லைன்ஸ் மீது வழக்கு பதிவு செய்தார். இந்த விபத்திn காரணமாக தனது மகன் கடுமையான மன மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டதாக எம்ரேயின் தாய் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ALSO READ | ரஷ்யாவில் நவால்னி உடல் நிலை கவலைக்கிடம்; புடினை எச்சரிக்கும் உலக நாடுகள்

 

இந்த வழக்கின் விசாரணையின் போது, ​​பாதிக்கப்பட்டவரின் தாயார், தேநீர் விழுந்ததால் எம்ரேயின் காலில் கடுமையாக தீக்காயம் ஏற்பட்டதாகவும், தனது மகனின் காயங்கள் குணமடைய மூன்று முதல் நான்கு வாரங்கள் ஆனதாகவும் கூறினார். இருப்பினும், காலில் உள்ள வடு போகவில்லை. அம்ரேயின்  காலில் ஏற்பட்ட இந்த வடுவை போக்க, அவரை பிளாஸ்டிக் சர்ஜனிடம் அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதி அவருக்கு 56 ஆயிரம் பவுண்டுகள் இழப்பீடு வழங்குமாறு விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். அதாவது எம்ரே காயம் காரணமாக சுமார் 58 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 2019 ஆம் ஆண்டில், மாண்ட்ரீல் ஒப்பந்தத்தில் உள்ள 17 வது பிரிவின் கீழ் விமானத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அதற்கு விமான நிறுவனங்கள் தான்  அதற்கு பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளதாக  ஐரோப்பிய நீதிமன்றம் ஒன்று தெளிவுபடுத்தியுள்ளது. 

அதன் அடிப்படையில், பயணிகளின் தவறு காரணமாக காயம் ஏற்பட்டது என்பதை நிரூபிக்க முடிந்தால் மட்டுமே விமான நிறுவனங்கள் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியும். அந்த தீர்ப்பின் அடிப்படையில் நீதிபதி பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.

ALSO READ | விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News