தந்தையின் தலையை துண்டித்து... கொடூர செயலை வீடியோ எடுத்து பரப்பிய மகன்..!

அமெரிக்காவில் ஒரு இளைஞன் தந்தையை கொடூரமாக கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த கொடூர செயலை 14 நிமிட வீடியோ எடுத்து youtube தளத்திலும் பதிவேற்றியுள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 2, 2024, 05:01 PM IST
  • தந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞன்.
  • கணவரின் தலையில்லாத உடலைப் பார்த்ததாக தாயான டெனிஸ் தெரிவித்தார்.
  • குளியலறையில் சமையலில் பயன்படுத்தும் பெரிய வெட்டுக்கத்தி ஒன்றை கண்டறிந்தனர்.
தந்தையின் தலையை துண்டித்து... கொடூர செயலை வீடியோ எடுத்து பரப்பிய மகன்..! title=

நடப்பது கலியுகம் தான் என்று  நம்பும் அளவிற்கு பல சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன. கொடூரமான கொலைகள், அதிலும் நெருக்கமான அன்புக்குரியவர்களே நடத்தும் கொடூர கலைகள் மனதை உலுக்கி விடுகின்றன. பெற்றவர்களை பாதுகாக்க வேண்டிய பிள்ளைகளே கொலையாளி ஆனால் என்ன செய்வது. அது போன்ற ஒரு சம்பவம் தான் அமெரிக்காவில் தற்போது நடந்துள்ளது.

அமெரிக்காவில் நடந்த கொடூர செயல்

அமெரிக்காவில் ஒரு இளைஞன் தனது தந்தையின் தலையை கொடூரமாக வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தந்தையை கொடூரமாக கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த கொடூர செயலை 14 நிமிட வீடியோ எடுத்து youtube தளத்திலும் பதிவேற்றியுள்ளார். சமூக வலைதளங்களில் அதனை பதிவிட்டு அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்.

மகனின் கொலைவெறிக்கு பலியான தந்தை

அமெரிக்காவில் மகனின் இந்த கொடூர கொலைவெறிக்கு பலியானவரின் பெயர் மைக்கேல். 68 வயதான இந்த நபர் பென்சில்வேனியாவில் உள்ள தனது இல்லத்தில் தனது 33 வயது மகனான ஜஸ்டின் என்பவரால் கொல்லப்பட்டார்.  ஜஸ்டின் என்பவரின் தாயான டெனிஸ், வெளியே சென்று இருந்த நிலையில் இந்த கொடூர சம்பவம் (Gruesome Murder) அரங்கேறி இருந்தது. வீடு திருப்பிய அவர் தனது கணவரின் தலையற்ற உடலை பார்த்து போலீசாரை அழைத்துள்ளார். அவர் வீடு வந்த போது, கார் பார்க்கிங்கில் கார் இல்லை என்றும், அவரது கணவரின் தலையில்லாத உடலைப் பார்த்ததாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்தார். அவரது மகன் தனது கணவரின் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி இருந்தார்.

போலீஸார் நடத்திய விசாரணை

உடனடியாக வீடு வந்த போலீசார், சோதனை செய்ததில் வீட்டில் இருந்த குளியலறையில் சமையலில் பயன்படுத்தும் பெரிய வெட்டுக்கத்தி ஒன்றை கண்டறிந்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்த வரையில் ஒரு பிளாஸ்டிக் பையில் மைக்கேல் அவரின் தலை கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் ரத்தம் தோய்ந்த ரப்பர் கை உறைகளும் காணப்பட்டன.

மேலும் படிக்க | அமெரிக்க விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டன! அதிர்ச்சியளிக்கும் 203% வரை கட்டண உயர்வு

சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ

மகா பாதக செயலை செய்த இந்த மகன், தனது தந்தையை தேச துரோகி என்று அழைத்ததோடு, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிளாக் லைஸ் மேட்டர் இயக்கம், LGBTQ கம்யூனிட்டி போன்றவற்றைக் கடுமையாக விமர்சனம் செய்தார். கொடூரமான அந்த வீடியோ youtube மற்றும் சமூக வலைதளத்தில் இருந்து அகற்றப்பட்டது.

போலீஸாரால் கைது செய்யப்பட்ட மகன்

போலீசார் நடத்திய விசாரணையில் மற்றும் தேடுதல் வேட்டையில், கொலை நடந்த சில மணி நேரங்களுக்கு பிறகு, பென்சில்வேனியாவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து 100 மில் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்த போது எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு வரும் பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி மீண்டும் விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜாமீன் பெற முடியாத பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டை வீட்டினர் தெரிவித்த கருத்து

கொலைகார மகனான ஜஸ்டின் குறித்து கருத்து தெரிவித்த அண்டை வீட்டினர், வளர்ப்பு நாயுடன் காலையில் நடை பயிற்சி மேற்கொள்ளும் பழக்கம் அவருக்கு இருந்தது என்றும், பல சமயங்களில் விதவிதமாக நடந்து கொண்டதை சிலர் பார்த்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | பச்சிளம் குழந்தைகளை கொன்ற காதல் தம்பதிகள்... நிறைவேற்றப்பட்டது தூக்கு தண்டனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News