Green Comet 2023: இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான, அரிய பச்சை வால்மீன் பூமியைக் கடந்து செல்லும், இதை வெற்றுக் கண்களால் இந்தியாவில் பார்க்க முடியும். தொலைநோக்கி மூலம் நட்சத்திரத்தை நன்றாகப் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகளும், விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். ஜனவரி 30 அன்று இந்தியாவில் தெரியத் தொடங்கிய இந்த நட்சத்திரம் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியைக் கடந்து சென்றதாம்!
Comet C/2022 E3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வால் நட்சத்திரம், பிப்ரவரி 2 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் விண்வெளியில் சூரிய குடும்பத்திற்கு செல்லும் முன், இந்தியாவில் பிரகாசிக்கும். உண்மையில் நாம் வாழும் பூமி கிரகத்தில் இருந்து 42 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நிலையிலும் நம்மால் பார்க்க முடியும் என்பது, இந்த நட்சத்திரத்தின் ஒளிக்கு உதாரணமாக சொல்லலாம்.
ஹான்லேயில் (லடாக்) உள்ள இந்திய வானியல் ஆய்வகத்திற்கு மேலே உள்ள வானத்தில் இந்த நட்சத்திரத்தை புகைப்படம் எடுக்க முடிந்தது. பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைகளுக்கு இடையே வால் நட்சத்திரம் மணிக்கு 2,07,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது.
பச்சை வால்மீன் விவரங்கள்
வானில் சப்தர்ஷி மண்டலம் மற்றும் துருவ நட்சத்திரம் இடையே சுமார் 20 டிகிரி உயரத்தில் பச்சை நிற வால் நட்சத்திரத்தை காணலாம். ஒளி மாசுபாடு இல்லாத நகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் தெரிவதைவிட, கிராமங்கள், ஆள் நடமாட்டம் இல்லாத வனாந்திரங்களில் இருந்து பார்க்கும்போது, இந்த விண்மீண் பளிச்சென்று தெரியும்.
வால் நட்சத்திரம் தெரியும் நேரம்
வானத்தில் இருந்து சந்திரன் மறைந்து, விடிவெள்ளி முளைக்கும் அதிகாலை நேரத்தில், இந்த விண்மீண் நன்றாகத் தெரியும். பிப்ரவரி இரண்டாம் தேதிக்குப் பிறகு, வால் நட்சத்திரம் பூமியிலிருந்து விலகிச் செல்லும்போது, அதன் பிரகாசம் படிப்படியாகக் குறையும். வால்மீன் எந்த அளவு பிரகாசமாக இருக்கும் என்பதை கணிப்பது கடினம் என்றாலும், இது 2023 இல் மிகவும் பிரகாசமான விண்மீனாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
வால் நட்சத்திரங்கள் என்றால் என்ன?
வால் நட்சத்திரங்கள் சூரிய குடும்பத்தைச் சுற்றி வரும் பனிப்பந்துகள் மற்றும் உறைந்த வாயுக்கள், பாறைகள் மற்றும் தூசி ஆகியவற்றைக் கொண்டவை. இந்த வான உடல்கள் உறைந்திருக்கும் போது மிதமானவை, ஆனால் அவை சூரியனை நெருங்கும் போது, அவை வெப்பமடைந்து வாயுக்கள் மற்றும் தூசிகளை உமிழ்ந்து, பெரும்பாலான கிரகங்களை விட பெரிய அளவில் ஒளிர்கின்றன. இந்த வால் நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை காலம் 50,000 ஆண்டுகளுக்கு அருகில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பச்சை வால்மீன் பற்றிய நாசாவின் கருத்து
நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (NASA) படி, நியண்டர்டால் வால்மீன் ஜனவரி மாதத்தில் வடமேற்கு நோக்கி நகரும், மேலும் பிப்ரவரி 1 மற்றும் 2 க்கு இடையில், அது பூமிக்கு மிக அருகில் வரும். இது அதன் தற்போதைய பிரகாசத்தை தக்க வைத்துக் கொண்டால், தொலைநோக்கியில் பார்ப்பது எளிது மற்றும் இருண்ட வானில் தொலைநோக்கி இல்லாமலும் பார்க்கலாம்.
மேலும் படிக்க | நிலவில் விரைவில் மனிதர்கள் குடியேறலாம்... விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள நம்பிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ