பார்கிங் பிரச்சனையால் பறிபோன உயிர்கள்: குழந்தைகளின் கண்முன் கொடூர கொலை

பார்கிங்கால் அவ்வபோது பல சண்டைகள் ஏற்படுகின்றன. இந்த சண்டைகள் மிகப் பெரியதாகி வன்முறையில் முடியும் நிகழ்வுகள் பற்றிய செய்திகளும் வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2021, 07:41 PM IST
  • பெருகி வரும் மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
  • அதிகரிக்கும் வாகன எண்ணிக்கை பார்க்கிங்கை பெரும் பிரச்னையாக மாற்றியுள்ளது.
  • பார்கிங் பிரச்சனையால் கொலைகளும் நடக்கின்றன.
பார்கிங் பிரச்சனையால் பறிபோன உயிர்கள்: குழந்தைகளின் கண்முன் கொடூர கொலை title=

லண்டன்: பெருகி வரும் மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் வாகன எண்ணிக்கை பார்க்கிங்கை பெரும் பிரச்னையாக மாற்றியுள்ளது. பார்கிங்கால் அவ்வபோது பல சண்டைகள் ஏற்படுகின்றன. இந்த சண்டைகள் மிகப் பெரியதாகி வன்முறையில் முடியும் நிகழ்வுகள் பற்றிய செய்திகளும் வருகின்றன.

இங்கிலாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாகனம் நிறுத்துவது (Parking) தொடர்பாக இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, அந்த தகராறு கொலையில் முடிந்தது. ஒரு தம்பதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அப்போது, ​​தம்பதியரின் குழந்தைகள் வீட்டில் இருந்துள்ளனர். பெற்றோர்கள் தங்கள் கண் முன்னே இறந்ததைக் கண்டு குழந்தைகள் ஆழ்ந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

சம்பவத்தையடுத்து குற்றவாளிகள் தப்பியோடியுள்ளனர்

'தி சன்' செய்தியின்படி, சோமர்செட்டின் நார்டன் ஃபிட்ஸ்வாரனில் வசிக்கும் 36 வயதான ஸ்டீபன் சாப்பிள் (Stephen Chapple) மற்றும்  அவரது மனைவி ஜெனிஃபர் (Jennifer) ஆகியோர் நவம்பர் 21 இரவு கொடூரமாக கொல்லப்பட்டனர். இவர்கள் வீட்டருகில் வசிக்கும் வாலிபருடன் வாகனம் நிறுத்துவது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று, குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் தனது தோழர் ஒருவருடன் அங்கு சென்றுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து, நிதானத்தை இழந்த இளைஞரும் அவரது தோழரும் தம்பதியைக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

ALSO READ: பகீர் தகவல்! 5000 பெண்களுடன் தொடர்பு வைத்துள்ள அமெரிக்க கோடீஸ்வரர்..!! 

மருத்துவமனை செல்வதற்குள் மரணம்

அந்த இளைஞருக்கு வாகனம் நிறுத்துவது தொடர்பாக தம்பதியினருடன் நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது. ஆனால், இந்த விவகாரம் இவ்வளவு பெரிய அளவில் வெடிக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. இது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் (Police) தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த தம்பதியினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். சம்பவத்தின் போது குழந்தைகளும் வீட்டில் இருந்துள்ளனர். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களை காயப்படுத்தவில்லை.

இதற்கு முன்பும் சர்ச்சை ஏற்பட்டது

இந்த ஜோடி அனைவருடனும் மிகவும் நட்பாக இருந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். ஸ்டீபன் சாப்பல் ஒரு ஆசிரியராக இருந்தார். அவருடைய மனைவி வீட்டில் வசித்து வந்தார். இருவரும் தேவையில்லாமல் சண்டை போட்டுக்கொண்டதை யாரும் பார்த்ததில்லை.

ஒருமுறை இவர்களின் வாகனம் நிறுத்துவது தொடர்பாக சிறிய தகராறு ஏற்பட்டு, போலீஸாரும் வரவழைக்கப்பட்டனர். அப்போது எல்லாம் நல்லபடியாக முடிந்தாலும் சில நாட்களுக்கு பிறகு மீண்டும் தகராறு ஏற்பட்டது.

ALSO READ:பாகிஸ்தானை காப்பாற்ற நினைத்து நெருக்கடியில் மாட்டிக் கொண்ட துருக்கி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News