நிலை மாறுகிறார் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, பணியிடத்தில் முன்னேற்றம்

Venus Transit: சுக்கிரனின் சஞ்சாரத்தால் பல ராசிக்காரர்களுக்கு மிக நல்ல நேரம் உருவாக உள்ளாது. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 29, 2022, 10:50 AM IST
  • கும்ப ராசிக்காரர்களின் நான்காம் வீட்டின் அதிபதியாக சுக்கிரன் உள்ளார்.
  • இந்த ராசிக்காரர்கள் சுக்கிரனின் சஞ்சாரத்தால் தொழிலில் வெற்றி பெறுவார்கள்.
  • பணியிடத்தில் மேல் அதிகாரிகளிடமிருந்து ஊக்கம் கிடைக்கும்.
நிலை மாறுகிறார் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, பணியிடத்தில் முன்னேற்றம் title=

சுக்கிரன் கோச்சாரம், ராசிகளில் அதன் பலன்: நவம்பர் 11 அன்று சுக்கிரன் தன் நிலையை மாற்றி விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கவுள்ளார். பொதுவாக அனைத்து ராசிகளில் ஏற்படும் மாற்றங்களும் அனைத்து கிரகங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் சஞ்சாரமும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை உண்டாக்கும். எனினும், இந்த சுக்கிரனின் சஞ்சாரத்தால் பல ராசிக்காரர்களுக்கு மிக நல்ல நேரம் உருவாக உள்ளாது. ஜோதிட சாஸ்திரப்படி நவம்பர் 11-ம் தேதி இரவு 7.52 மணிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகிறது. 

வேத ஜோதிடத்தின்படி, சுக்கிரன் அரக்கர்களின் குருவான சுக்ராச்சாரியார் ஆவார். சுக்கிரன் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், அன்பு மற்றும் அழகு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறது. சுக்கிரனின் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டிற்கு அதிபதியாக சுக்கிரன் உள்ளார். சுக்கிரனின் இந்த சஞ்சாரம் இவர்களுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கும். வருமான ஆதாரமும் கூடும். முதலீடு செய்வதற்கு இது ஒரு நல்ல நேரமாகவும் இருக்கும். இப்போது செய்யும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 6 மற்றும் 11ம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கிறார். சுக்கிரனின் சஞ்சாரம் இவர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது நல்ல காலமாக அமையும். உடல் நலன் நன்றாக இருக்கும்.

மகரம்

சுக்கிரன் மகர ராசிக்கு ஐந்து மற்றும் பத்தாம் வீடுகளுக்கு அதிபதியாக உள்ளார். பணியிடத்தில் நேரம் சாதகமாக இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் தனிப்பட்ட வாழ்க்கையும் நன்றாக இருக்கும். சமூக அந்தஸ்தும் கூடும். பண ஆதாயமும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | சந்திர கிரகணம் 2022: ‘சில’ ராசிகளுக்கு பண இழப்பு... ‘சில’ ராசிகளுக்கு பண வரவு! 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களின் நான்காம் வீட்டின் அதிபதியாக சுக்கிரன் உள்ளார். இந்த ராசிக்காரர்கள் சுக்கிரனின் சஞ்சாரத்தால் தொழிலில் வெற்றி பெறுவார்கள். பணியிடத்தில் மேல் அதிகாரிகளிடமிருந்து ஊக்கம் கிடைக்கும். இந்த நேரத்தில் சம்பள உயர்வையும் எதிர்பார்க்கலாம். 

மீனம்

உயர்கல்வியுடன் தொடர்புடைய மீன ராசிக்காரர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கும் இந்த நேரம் சிறப்பாக இருக்கும். நீங்கள் ஆலோசகராக பணிபுரிந்தால், இப்போது நல்ல முடிவுகளை எடுப்பீர்கள், மற்றவர்களுக்கு நல்ல அலோசனைகளை வழங்குவீர்கள். 

சிம்மம் 

சுக்கிரனின் சஞ்சாரத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும், வளமும் கூடும். குடும்பத்தில் சில குடும்ப உறுப்பினர்கள் புதிய தொழிலைத் தொடங்குவார்கள். அதனால் குடும்பத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சில தொழிலதிபர்களும் இந்த காலகட்டத்தில் பலன் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Guru Margi 2022: நவம்பரில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! குரு பதவி உயர்வு தருவார் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News