கொரோனாவுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள்...

கொரோனா வைரஸின் சிகிச்சைக்கு, நீங்கள் அரசு மருத்துவமனைகளை மட்டுமே சார்ந்து இருக்க தேவையில்லை. தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெறலாம், அதுவும் இலவசமாக. 

Last Updated : Jun 16, 2020, 04:09 PM IST
கொரோனாவுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள்... title=

கொரோனா வைரஸின் சிகிச்சைக்கு, நீங்கள் அரசு மருத்துவமனைகளை மட்டுமே சார்ந்து இருக்க தேவையில்லை. தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெறலாம், அதுவும் இலவசமாக. 

கொரோனா வைரஸுக்கான சிகிச்சையினை இலவசமாக பெற மத்திய அரசின் ஒரு திட்டம் நமக்கு உதவுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கூட பணம் செலவழிக்காமல் இந்த தொற்றுநோய்க்கு நாம் சிகிச்சை பெறலாம்.

விமானம் மூலம் தமிழகம் வருவோருக்கு RT-PCR சோதனை கட்டாயம்: TN Govt...

  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை

உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டமான 'ஆயுஷ்மான் பாரத்'-ன் கீழ், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சிகிச்சை சாத்தியமாகும் என்று தேசிய சுகாதார ஆணையத்தின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி பிரவீன் கெடம் தெரிவித்துள்ளார். கோவிட் (COVID-19) தொகுப்பின் கீழ், நாடு முழுவதும் சுமார் 8000 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, சுமார் 6000 கொரோனா நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் 1000 புதிய மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் இதுவரை நாடு முழுவதும் 22,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜனாவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். இந்த திட்டத்தில், கோவிட் சிகிச்சை மற்றும் சிகிச்சையின் தொகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. PPE கிட் மற்றும் முக கவசத்திற்கான செலவுகளும் இதில் அடங்கும். மாநில அரசுகள் அவற்றின் தேவைக்கேற்ப வெவ்வேறு தொகுப்புகளை தயாரிக்குமாறு மையம் கேட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்க 10,000 FPO-களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!...

ஆயுஷ்மான் பாரத் யோஜனா அல்லது பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜனா என்பது இந்திய அரசின் சுகாதாரத் திட்டமாகும், இதன் நோக்கம் பொருளாதார ரீதியாக பலவீனமானவர்களுக்கு குறிப்பாக PPL அட்டை வைத்திருப்பவர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்குவதாகும். இந்த திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ .5 லட்சம் வரை பணமில்லா சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 23 செப்டம்பர் 2018 அன்று ஜார்க்கண்டின் ராஞ்சியில் தொடங்கினார். இந்த திட்டத்தின் கீழ் குடும்ப அளவு, வயது அல்லது பாலினத்திற்கு வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News