குத்துவிளக்கின் மகிமைகளும், தத்துவங்களும்...

மங்களத்தைக் குறிக்கும் தத்துவமாக கருதப்படும் குத்துவிளக்கின் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம் என்றும், மேற்பகுதி சிவ அம்சம் பொருந்தியது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 7, 2021, 05:55 AM IST
குத்துவிளக்கின் மகிமைகளும், தத்துவங்களும்... title=

புதுடெல்லி: குத்துவிளக்கு இந்தியாவின் மரபு சார்ந்த பாரம்பரியங்களுள் ஒன்று. இந்தியாவில் மங்களகரமான அடையாளங்களுள் ஒன்றாக கருதப்படும் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தான் சமய சார்பான சடங்குகளும், பொது விழாக்களும் துவங்கப்படுகின்றன.  

விளக்குகளில், குத்துவிளக்கு தெய்வீகமானது.தெய்வ அம்சம் பொருந்தியது. மங்களத்தைக் குறிக்கும் தத்துவமாக கருதப்படும் குத்துவிளக்கின் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம் என்றும், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய் – நாதம், திரி – பிந்து, சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ - மலை மகள். இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு.

குத்துவிளக்கின் தத்துவம் ஐந்து குணங்களை குறிக்கின்றன. அவை:  அன்பு, நிதானம், சமயோசிதம், மன உறுதி, சகிப்புத்தன்மை. குத்துவிளக்கேற்றும் பெண்களுக்கு இந்த ஐந்து குணங்களும் ஏற்படும். .

இந்த ஐந்து குணங்களும் சேர்ந்து பிரகாசித்தால், குடும்பத்தில் நிம்மதி தழைக்கும் என்பதே தத்துவம். குத்துவிளக்கின் அடிப்பாகம்  மலர்ந்த தாமரைப் பூப்போல அகன்று வட்டமாக இருப்பதால் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் பிரம்மனைக் குறிக்கிறது.

Also Read | இன்றைய பஞ்சாங்கம்: 2021 பிப்ரவரி 07ஆம் நாள், தை 25

குத்துவிளக்கின் தண்டுப்பாகம் ஓங்கி உலகளந்த பெருமான் மஹாவிஷ்ணுவைக் குறிக்கின்றது. தண்டுக்கு மேல் எண்ணெய் ஊற்றப்படும் பாகம், நெற்றிக்கண்ணிலேயே சூட்டை வைத்திருக்கும் எம்பெருமான் சிவனைக் குறிக்கிறது. 

திரி எரிவதற்குரிய 5 முகங்களும் மஹேஸ்வரனை குறிக்கின்றது. அவை, ஈசானம், வாமதேவம் சத்யோசதம், தத்புருஷம், அகோரம் என்ற மகேஷ்வரனின் ஐந்து முகங்களை குறிக்கின்றன. 

குத்துவிளக்கின் மேல் பகுதியில் அதாவது அகலின் மேல் கும்ப கலசம் போல் உள்ள உச்சிபாகம் சதாசிவன் என்று அறியப்படுகிறது. அகல் பாகம் முழுவதும் பரவும் எண்ணெயானது, உருவமின்றி எங்கும் பரவி நிற்கும் நாத தத்துவத்தைக் குறிக்கின்றது.

இந்து தத்துவத்தை அல்லது வெண்மை நிற ஒளியை குறிக்கிறது திரி என்றால், தீபச்சுடரானது, திருமகள் லட்சுமியின் சொரூபமாகக் கருதப்படுகிறது. பிரகாசமாய் இருக்கும் ஒளி, ஞானமயமான சரஸ்வதி தேவியின் சொரூபத்தை குறிக்கின்றது.

எரிக்கும் சக்தியாய் பரவும் சூடானது, அழிக்கும் சக்தியாகிய ருத்திராணியின் சொரூபமாகக் கருதப்படுகிறது.  

Also Read | எந்நாளும் வளமாய் வாழ திருஷ்டி பரிகாரங்கள் பற்றி தெரியுமா? 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News