தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஆலந்தூரை ஆளப்போகும் வேட்பாளர் யார்? களத்தில் யார் யார் உள்ளனர்?

ஆலந்தூரின் மொத்த மக்கள் தொகை 3,89,857 ஆகும். இதில் ஆண்கள் 1,92,854, பெண்கள் 1,96,921, திருநங்கைகள் 82 உள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2021, 10:36 AM IST
  • சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகத்தின் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.
  • 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுகவின் தா மோ அன்பரசன், அதிமுகவின் எஸ்.ராமச்சந்திரனுக்கு எதிராக 19,169 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
  • 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வின் பி.வளர்மதிக்கும் திமுக-வின் தா.மோ. அன்பரசனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஆலந்தூரை ஆளப்போகும் வேட்பாளர் யார்? களத்தில் யார் யார் உள்ளனர்? title=

சென்னை: தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்பாக முழு வீச்சில் நடந்துகொண்டிருக்கின்றன. அனைத்து கட்சிகளும் மக்களைக் கவர பலவித புது முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகத்தின் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.

சென்னையில் (Chennai) உள்ள ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியைப் பற்றியும், அங்கு யாருக்கு எவ்வளவு வெற்றி வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றியும் இங்கே காணலாம்.

ஆலந்தூரின் மொத்த மக்கள் தொகை 3,89,857 ஆகும். இதில் ஆண்கள் 1,92,854, பெண்கள் 1,96,921, திருநங்கைகள் 82 உள்ளனர். 

ஆலந்தூர் தொகுதியில் கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. இதற்கு முன்னர் ஆலந்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற கட்சிகளையும் வேட்பாளர்களையும் பற்றி பார்க்கலாம்:

ALSO READ: தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜொலிக்கப்போவது எந்த கட்சியின் விளக்கு?

1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக-வைச் (DMK) சேர்ந்த சி சண்முகம் வெற்றி பெற்றார். 2001-ல் நடந்த தேர்தலில் அதிமுக இங்கு பெரும்பான்மைப் பெற்றது. அதிமுக-வை சேர்ந்த பி.வளர்மதி ஆலந்தூர் தொகுதியில் 2001-ல் எம்.எல்.ஏ ஆனார். அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்றது. திமுக-வின் தா. மோ. அன்பரசன் இங்கு வெற்றி பெற்றார். பின்னர் 2011 நடந்த தேர்தலில் தேமுதிக-வின் பன்ரொட்டி எஸ் ராமசந்திரனுக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது. 2016 நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக-வின் தா.மோ. அன்பரசன் வெற்றி பெற்றார்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆலந்தூர் தொகுதியில் உள்ள 100 சதவீத மக்கள்தொகை நகரப்புற மக்கள்தொகை வரிசையில் வருகிறது. 

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுகவின் தா மோ அன்பரசன், அதிமுகவின் எஸ்.ராமச்சந்திரனுக்கு எதிராக 19,169 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தற்போது 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வின் (AIADMK) பி.வளர்மதிக்கும் திமுக-வின் தா.மோ. அன்பரசனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் சரத் பாபு, நாம் தமிழர் கட்சியின் கார்த்திகேயன் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் எம். மொகம்மது தமீம் அன்சாரி ஆகியோர் களத்தில் உள்ள மற்ற வேட்பாளர்கள் ஆவர்.

ALSO READ: மேடையில் மோதல், போஸ்டரில் ஒற்றுமையா? அதிமுக, திமுக ஒரே பெண்ணின் படத்தைப் போட காரணம் என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News