Health Tips: கார்த்திகை மாதம் தொடங்கவுள்ளது. இந்த மதத்தில் பருவ மாற்றம் ஏற்படுவதால் நோய்வாய் படுவதற்கான வாய்ப்பும் அதிகமாகிறது. ஆகையால் பெரும்பாலும் மக்கள் இந்த காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில சிறப்பு உணவுகளை உட்கொள்வது வழக்கம். இவற்றில் காய்கள் மற்றும் பழங்களுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. அப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றான நெல்லிக்காயால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits of Amla)
நெல்லிக்காய் பல நோய்களில் இருந்து நமது உடலை பாதுகாக்கிறது. இந்த பழம் ஒரு சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இது நமது உடலில் பல பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இதை சூப்பர்ஃபுட் (Superfood) என்று அழைக்க காரணம் என்ன? உடலின் முழுமையாக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல கூறுகள் நெல்லிக்காயில் உள்ளன. இதை உட்கொள்வது நமது உடலின் பல்வேறு உறுப்புகளிய பலப்படுத்த உதவுகிறது. நெல்லிக்காய் நம் உடலுக்கு அளிக்கும் ஏராளமான நன்மைகளில் சிலவற்றை பற்றி இங்கே காணலாம்.
உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் சூப்பர்ஃபுட் நெல்லிகாயின் ஆரோக்கிய நன்மைகள்:
1. பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் இருப்பிடம்
நெல்லிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. இது தவிர, இதில் துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், பல வழிகளில் இது நம உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இது ஹார்மோன் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் இதயம், குடல், வயிறு மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளையும் தடுக்கிறது. ஆகையால் இந்த உறுப்புகளில் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை உட்கொள்ள வேண்டும். இது தவிர, இந்த கூறுகள் அனைத்தும் சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | முதுமையிலும் இளமையாக இருக்கணுமா... ‘இந்த’ 5 உணவுகளுக்கு குட்பை சொல்லுங்க..!
2. நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில குறிப்பிட்ட உணவுகள் உள்ளன. அவற்றில் நெல்லிக்காய் (Amla) முக்கியமானதாகும். ஏனெனில் இது பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்தை பலப்படுத்த பல வழிகளில் உதவுகிறது. நெல்லிக்காய் நமது நோயெதிர்ப்பு செல்களை அதிகரிக்கிறது. மேலும் இது அனைத்து நோய்களுக்கும் எதிராக உடலுக்கு வலிமை அளிக்கிறது. இதை உட்கொள்வதால், வானிலை மாறினாலும் எந்த வித நோய்களுக்கும் நாம் ஆளாகாமல் இருக்கலாம். ஆகையால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட வேண்டும்.
3. பல நோய்களில் நெல்லிக்காய் நன்மை பயக்கும்
நெல்லிக்காயின் சிறப்பு என்னவென்றால், இதை உட்கொள்வது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி தமனிகளுக்கு ஒரு ஸ்க்ரப் போல செயல்பட்டு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது இரத்தத்தை மெல்லியதாக்குகிறது, மேலும் அதிக கொழுப்பு மற்றும் கொழுப்பு கல்லீரல் அபாயத்தையும் குறைக்கிறது. இது தவிர, சருமம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் நெல்லிக்காய் ஒரு சூப்பர்ஃபுட் ஆகும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மூட்டு வலிக்கு 'பை' சொல்ல இந்த பழங்களுக்கு 'ஹாய்' சொல்லுங்க!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ