இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்! புற்றுநோயாக கூட இருக்கலாம்!

புற்றுநோய் அறிகுறிகள்: ஆண்களில் பொதுவாக நுரையீரல், புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு மற்றும் கல்லீரல் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 6, 2023, 02:01 PM IST
  • பெண்களில் மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது.
  • 43% ஆண்களுக்கு புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது.
  • சிறுநீரில் ரத்தம் வெளியாவது சிறுநீர்ப்பை புற்றுநோயின் மிகவும் பொதுவான அறிகுறியாக கருதப்படுகிறது.
இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்! புற்றுநோயாக கூட இருக்கலாம்!

புற்றுநோய் என்றாலே பலருக்கும் மனதுக்குள் ஒருவித பயம் இருக்கும், உடலின் பல்வேறு பாகங்களை பாதிக்கும் நாள்பட்ட நோயாக புற்றுநோய் கருதப்படுகிறது.  நமது உடலிலுள்ள செல்களின் அபரிமிதமான வளர்ச்சியால் தான் புற்றுநோய் உண்டாகிறது.  செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து ஆரோக்கியமான திசுக்களை அழித்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.  உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, புற்றுநோயானது உலகளவில் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாக உள்ளது.  கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் 9.6 மில்லியன் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர்.  ஆண்களில் பொதுவாக நுரையீரல், புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு மற்றும் கல்லீரல் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் காணப்படுகிறது.  அதேபோல பெண்களில் மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பப்பை வாய் மற்றும் தைராய்டு ஆகிய பகுதிகளில் புற்றுநோய் காணப்படுகிறது.  

தேசிய புற்றுநோய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மார்பக புற்றுநோய், நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய், தோல் மெலனோமா, சிறுநீர்ப்பை புற்றுநோய், ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா, சிறுநீரகம் மற்றும் சிறுநீரக இடுப்பு புற்றுநோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய், லுகேமியா, கணைய புற்றுநோய், தைராய்டு புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆகிய புற்றுநோய்கள் அதிகளவில் உள்ளது.  2020 ஆம் ஆண்டில், ஆண்களுக்கு ஏற்படும் அனைத்து புற்றுநோய்களிலும் 43% புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களால் உருவாக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  பெண்களுக்கு, மார்பகம், நுரையீரல் மற்றும் பெருங்குடல் ஆகிய மூன்று பொதுவான புற்றுநோய்கள் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் இல்லாவிட்டால் இதனால் இறப்பு கூட ஏற்பட நேரிடும்.  புற்றுநோய் பாதிப்பு இருப்பதை நமது உடல் சில அறிகுறிகளின் மூலமாக வெளிப்படுத்துகிறது, அதனை நாம் உற்றுநோக்குவதன் மூலம் நோயை தொடக்கத்திலேயே சரிசெய்யலாம்.

மேலும் படிக்க | ஒரு மாதம் சர்க்கரைக்கு 'நோ' சொல்லுங்க... உங்க உடம்பு எப்படி மாறுது பாருங்க!

1) இருமல்:

ஒருவருக்கு பல்வேறு காரணங்களால் இருமல் ஏற்படலாம்.  உதாரணமாக வைரஸ் தொற்று, ஆஸ்துமா, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) மற்றும் இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (ஜிஇஆர்டி) போன்றவையும் தொடர்ந்து இருமலை ஏற்படுத்தும்.  இருப்பினும் நுரையீரல் புற்றுநோய் தீவிரமாக இருந்தால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும்.  இதனால் உங்களுக்கு வறட்டு இருமல் ஏற்படும், உங்கள் தொடை வறண்டு விடும், இந்த நீடித்த இருமலால் ரத்தம் கலந்த சளி வெளியேறலாம்.

2) குடல் பகுதியில் அசாதாரண உணர்வு:

குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உடலில் சில அறிகுறிகள் தென்படுகிறது.  குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் அடிக்கடி கழிப்பறைக்குச் செல்ல நேரிடும் மற்றும் மலம் கழிக்கும் போது அல்லது இரத்தத்துடன் கூடிய மலம் வெளிப்படும்.

3) உடலில் கட்டிகள்:

உடலில் திடீரென தோன்றும் கட்டிகள் கவலைக்குரியவை, உடலில் தோன்றும் அனைத்து கட்டிகளும் புற்றுநோயாக இல்லை என்றாலும் இது கவனிக்க வேண்டியது தான்.  திடீரென்று உடலில் கட்டிகள் தோன்றினாலோ அது வலியில்லாமல் இருந்தாலோ இதை நீங்கள் கவனிக்க வேண்டும்.  புற்றுநோய் கட்டிகள் படிப்படியாக அளவு வளரும் மற்றும் உடலின் வெளிப்புறத்தில் இருந்து உணர முடியும்.  இவை மார்பகம், விரை அல்லது கழுத்தில் தோன்றும், சில நேரங்களில் கைகள் மற்றும் கால்களிலும் தோன்றும். 

4) மச்சத்தின் அளவில் மாற்றம்:

மச்சத்தின் அளவு, வடிவம் மற்றும் நிறத்தில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது, இது மெலனோமாவைக் குறிக்கலாம், இது ஒரு மிகவும் தீவிரமான தோல் புற்றுநோயாகும். மெலனின் உற்பத்தி செய்யும் செல்களில் உருவாகும் இது உங்கள் தோலுக்கு நிறத்தை கொடுக்கும் நிறமி ஆகும்.

5) திடீர் எடை இழப்பு:

திடீரென்று காரணம் இல்லாமல் உடல் எடை குறைவதும் புற்றுநோயின் மற்றொரு முக்கியமான அறிகுறியாக கருதப்படுகிறது.  வயிறு, கணையம், உணவுக்குழாய் மற்றும் நுரையீரலை பாதிக்கும் புற்றுநோய்களால் குறிப்பிடத்தக்க எடை இழப்பு நிகழ்கிறது.

6) வலி:

எந்த காரணமும் இல்லாமல் உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் சில வாரங்கள் மற்றும் மாதங்கள் வரை நீடிக்கும் வலியை புறக்கணிக்கக்கூடாது.  அசௌகரியம், மந்தமான, வலி, கூர்மையான அல்லது எரிச்சல் போன்றவை தொடர்ந்தும் கடுமையாகவும் இருந்தால் அதனை நீங்கல் பரிசோதனை செய்ய வேண்டும்.

7) உணவு விழுங்குவதில் சிரமம்:

ஒருவர் உணவை விழுங்க முடியாமலோ அல்லது உணவை விழுங்க மிகவும் சிரமப்பட்டாலோ அவருக்கு டிஸ்ஃபேஜியாவால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.  கழுத்தில் கட்டி வளரும் புற்றுநோயாளிகளுக்கு இந்த நிலை அதிகமாக உள்ளது, இவை உணவுப் பாதையில் அடைப்பு அல்லது குறுகலை ஏற்படுத்தலாம், இதன் காரணமாக உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

8) சிறுநீரில் ரத்தம் வெளியாதல்:

சிறுநீரில் ரத்தம் வெளியாவது சிறுநீர்ப்பை புற்றுநோயின் மிகவும் பொதுவான அறிகுறியாக கருதப்படுகிறது, இதனை மருத்துவ ரீதியாக ஹெமாட்டூரியா என்று அழைக்கின்றனர்.  புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில ஆண்களுக்கு தங்கள் சிறுநீரில் ரத்தம் வெளியேறுகிறது, இது புரோஸ்டேட்டில் இருந்து ரத்தம் கசிவதால் ஏற்படுகிறது.

மேலும் படிக்க | எச்சரிக்கை! பாகற்காயை அளவிற்கு அதிகமாக உட்கொள்ள வேண்டாமே ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News