கொழுப்பை வேகமாக குறைக்க வேண்டுமா? உறங்குவதற்கு முன்பு ‘இதை’ சாப்பிடுங்க போதும்!

Cardamom Benefits: கொழுப்பை வேகமாக குறைப்பதற்கு என பல முயற்சிகள் உள்ளன. அதில் ஒரு முயற்சி என்ன என்பதை இங்கு பார்ப்போமா? 

Written by - Yuvashree | Last Updated : Feb 21, 2024, 03:53 PM IST
  • கலோரியை குறைக்க வழி
  • இரவில் ஏலக்காயை எடுத்துக்கொள்ளலாம்
  • இதை எப்படி சாப்பிட வேண்டும்?
கொழுப்பை வேகமாக குறைக்க வேண்டுமா? உறங்குவதற்கு முன்பு ‘இதை’ சாப்பிடுங்க போதும்! title=

Cardamom Aids In Burning Calories And Weight Loss: பலர், உடல் எடையை குறைப்பதற்கும் கொழுப்பை கரைப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வர். இந்த முயற்சியில் ஒன்று, நமது டயட்டில் ஏலக்காயை சேர்த்துக்கொள்வது. இத்துனூண்டு ஏலக்காயில் பல்வேறு மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஏலக்காயின் மருத்துவ நன்மைகளையும், அதை சாப்பிடுவதனால் ஏன்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் இங்கு பார்ப்போம். 

உறங்க செல்வதற்கு முன்பு ஏலக்காய் சாப்பிடலாமா? 

உறங்க செல்வதற்கு முன்பு, தினமும் மூன்று ஏலக்காய் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என மருத்துவர்கள் பலர் பரிந்துரைக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை ஏலக்காய், மசாலா பொருட்களின் ராணி என அழைக்கப்படுகிறது. டீ, இனிப்பு பொருட்கள், சர்க்கரை பொங்கல், சமயங்களில் பிரியாணி வரை ஏலக்காய் பயன்படுத்தப்படுகின்றது. பலர், ஏலக்காய் வெறும் வாசனைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதாக கருதுகின்றனர். ஆனால், அதற்காக மட்டுமல்ல, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் ஏலக்காய் தாராளமாய் உதவுகிறது.  

மேலும் படிக்க | போகமாட்டேன் போ! அடம் பிடிக்கும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தரும் வீட்டு வைத்தியம்!

கொழுப்பை குறைக்கும் ஏலக்காய்:

கொழுப்பை குறைப்பதற்கு பலர் காலையில் எழுந்து வர்க்-அவுட் செய்வது, டயட் இருப்பது என பல முயற்சிகளை மேற்கொள்வர். அவற்றுடன் சேர்த்து, தினமும் உறங்க செல்வதற்கு முன்பு ஏலக்காய் சாப்பிட வேண்டும் என்கின்றனர், ஊட்டச்சத்து நிபுணர்கள். ஏலக்காயில், புரதம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, சோடியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. 

அது மட்டுமன்றி, உடலில் மெட்டபாலிச சக்தியை அதிகரிக்கவும் ஏலக்காய் உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, தினமும் இரவு உறங்க செல்வதற்கு முன்பு, ஏலக்காய் சாப்பிட்டால் உடலில் மெட்டபாலிச சக்தி அதிகரித்து, கொழுப்பு குறையும் என சில மருத்துவ ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் உடல் எடையும் குறையும் என நம்பப்படுகிறது. 

எப்படி சாப்பிட வேண்டும்?

உடலில் உள்ள கெட்டக்கொழுப்பை கரைக்க, தினமும் இரவு ஒரு கிளாஸ் வெந்நீரில் மூன்று ஏலக்காய்களை சேர்த்து குடிக்க வேண்டும். இதனால், உடல் கொழுப்புகள் கரைந்து உடல் எடையை குறைக்கலாம். உறங்க செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இதை குடிக்க வேண்டும். 

என்ன நன்மைகள்?

உறங்க செல்வதற்கு முன்பு ஏலக்காயை சாப்பிடுவதால், வயிற்றில் ஏற்படும் கோளாறுகளான மலச்சிக்கல், அஜீரணம், வாயுத்தொல்லை ஆகியவற்றை நீக்கலாம். அது மட்டுமன்றி, ஏலக்காய் வாய் துர்நாற்றத்தை நீக்கும் உணவாகவும் இருக்கிறது. இதை மென்றால், வாய் துர்நாற்றம் நீங்குவது மட்டுமன்றி, வாயில் உள்ள பாக்டீரியாக்களையும் நீக்கலாம். புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பவர்கள், இதனை எடுத்துக்கொண்டு அந்த பழக்கத்தில் இருந்து மீளலாம். 

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான செரிமான கோளாறு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவற்றையும் நீக்க, ஏலக்காயை சாப்பிடலாம். சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றை குணப்படுத்தவும் ஏலக்காயை உபயொகிக்கலாம். 

பிற நன்மைகள்:

>ஏலக்காயில் உள்ள நற்பன்புகள், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில், உடலில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ஸை குறைக்க ஏலக்காய் பயன்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

>புற்றுநோயை எதிர்த்து போராடும் சத்துகள், ஏலக்காயில் உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

>அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த உணவு பொருட்களுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது, 

>வயிற்று புண்களை ஆற்றும் உணவு பொருளாகவும் பார்க்கப்படுகிறது, ஏலக்காய்.

>ஏலக்காய், பல் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்புகளையும் சரி செய்ய உதவுமாம். 

மேலும் படிக்க | எவ்வளவு கொலஸ்ட்ரால் இருந்தாலும் பிழிந்து எடுக்கும் இந்த பானங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News