மிரட்டும் குரங்கு அம்மை.... அறிகுறிகளும்... வராமல் தடுக்க செய்ய வேண்டியவையும்

Monkey Pox Latest Update: ஆப்பிரிக்காவில் தொடங்கி, காங்கோ, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருவதால், உலகம் முழுவதும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 18, 2024, 10:47 AM IST
மிரட்டும் குரங்கு அம்மை.... அறிகுறிகளும்... வராமல் தடுக்க செய்ய வேண்டியவையும் title=

Monkey Pox Latest Update: ஆப்பிரிக்காவில் தொடங்கி, காங்கோ, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருவதால், உலகம் முழுவதும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குரங்கு அம்மை பரவலை சா்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு கடந்த 14ம் தேதி அறிவித்தது. பெரியம்மை போன்ற வைரஸ்களின் குடும்பத்தைச் சேர்ந்தது குரங்கு அம்மை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு அருகில் பாகிஸ்தானில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் அச்சம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் குரங்கு அம்மை பாதிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. 34 வயது ஆணுக்கு குரங்கு அம்மை பாதிப்பின் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன என பெஷாவரில் உள்ள கைபர் மருத்துவ பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது. நோயாளி ஆகஸ்ட் 3 அன்று சவுதி அரேபியாவிலிருந்து பெஷாவருக்கு வந்த சிறிது நேரத்திலேயே அவருக்கு அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

குரங்கு அம்மை பரவலை கருத்தில் கொண்ட, மத்திய சுகாதார அமைச்சகத்தின் தயாா்நிலை மற்றும் தற்போதைய சூழல் குறித்து அமைச்சா் ஜெ.பி.நட்டா மூத்த அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆய்வு நடத்தினாா். குரங்கு அம்மை நோய் குறித்து சா்வதேச பொது சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு கடந்த 2022ம் ஆண்டு முதன்முதலாக அறிவித்த நிலையில், இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டது என்றும் கடைசியாக கடந்த மாா்ச் மாதம் ஒருவருக்கு பாதிப்பு இருந்தது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பில்லை என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

மங்கிபாக்ஸ் வைரஸ், மனிதர்களிடமிருந்து, மனிதர்களுக்கு எளிதில் பரவாது. ஆனால், இந்த தொற்று பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவும். தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேரில் ஒருவர் இறந்துவிடுவார்கள் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்

குரங்கு அம்மை பரவும் விதம்

குரங்கு அம்மை என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும், இது முக்கியமாக பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் சருமம் அல்லது வாய் அல்லது பிறப்புறுப்பு ஆகியவற்றுடன் நேரடி தொடர்பு மூலம் குரங்கு அம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் பெரும்பாலான நோய் பரவல் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | 21 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்

ஆடைகள் அல்லது கைகுட்டை போன்ற தொற்று ஏற்பட்ட நபர் பயன்படுத்திய பொருட்கள் மூலம் பரவும் நிலையில், பச்சை குத்தும் கடைகள், ப்யூட்டி பார்லர்கள் அல்லது பிற பொது இடங்களில் பயன்படுத்தப்படும் பொதுவான பொருட்கள் போன்றவற்றின் மூலம் இந்த தொற்று அதிகம் பரவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நிலையில், பாதிக்கப்பட்ட விலங்குகள் கடித்தல், கீறுதல் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் பிற செயல்பாடுகள் மூலமாகவும் பரவுகிறது.

குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் என்ன?

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கைகள், கால்கள், மார்பு, முகம் அல்லது வாயில் அல்லது பிறப்புறுப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரிப்பு ஏற்படும். சருமத்தில் இவை இறுதியில் கொப்புளங்களை உருவாக்குகின்றன. சருமத்தில் அரிப்பு, சீழ் வடிதல், 2 வாரங்களுக்கும் அதிகமான தொடர் காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, சோர்வு, நிணநீர் கணுக்கள் வீக்கம் ஆகியவை குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள்.
குரங்கு அம்மை பாதிப்பை தவிர்க்க தடுக்க செய்ய வேண்டியவை.

குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பை தவிர்க்க செய்ய வேனண்டியவை

ஆப்பிரிக்காவில் வேகமாக அதிகரித்து வரும் குரங்கு அம்மையின் தாக்கம் தற்போது மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு எவருக்கும் இல்லை என்றாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். சுகாதாரம் மற்றும் தூய்மையில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். பொது இடங்களில், அதிக கவனத்துடன் இருப்பதும் அவசியம். குரங்கு அம்மையின் அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையின் படி, பரிசோதனை மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

மேலும் படிக்க | Pancreas Health: டயட்டில் ‘இவற்றை’ சேருங்கள்... உங்கள் கணையம் தாங்க்யூ சொல்லும்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News