ஒரே ஷாட் ‘ஸ்புட்னிக் லைட்’ கோவிட் தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அவசரகால பயன்பாட்டு அனுமதியை வழங்கியுள்ளது. நாட்டில் வயது வந்தோருக்கான ஒப்புதலைப் பெற்ற ஒன்பதாவது கோவிட் 19 தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்புட்னிக் லைட் என்பது ஒரு டோஸ் தடுப்பூசியாகும். முதலில் இரண்டு டோஸ் ஸ்புட்னிக் V தடுப்பூசி வெளியானது, அது, ரீகாம்பினன்ட் ஹியூமன் அடினோவைரஸ் செரோடைப் எண் 26 (rAd26) ஆகும்.
செப்டம்பர் 2020 இல், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் (RDIF) இணைந்த Dr Reddy's Laboratories மருந்து நிறுவனம், ஸ்புட்னிக் V இன் மருத்துவப் பரிசோதனைகளை நடத்துவதற்கும் தடுப்பூசியை இந்தியாவில் விநியோகம் செய்யவும் ஒப்பந்தம் போட்டது.
Reuters: "India approves one-shot Sputnik Light COVID vaccine"
https://t.co/yNhq1Szeyo— Sputnik V (@sputnikvaccine) February 6, 2022
இந்தியாவில் அவசரகால சூழ்நிலைகளில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்காக இரண்டு-டோஸ் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு DCGI ஏப்ரல் 2021 இல் அனுமதி வழங்கியது.
இந்தியாவில் சிங்கிள்-ஷாட் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் (Covid Vaccine) மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையைத் தொடர்ந்து, ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனம் டாக்டர் ரெட்டீஸ், ரஷ்யாவில் மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளுடன், டிசிஜிஐக்கு டிசம்பர் 2021 இல் தனது ஒப்புதலுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜென்டினா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யா உட்பட உலகம் முழுவதும் 30 நாடுகளில் ஸ்புட்னிக் லைட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இத்தாலியில் உள்ள ஸ்பல்லான்சானி நிறுவனம் நடத்திய ஒரு சுயாதீன ஒப்பீட்டு ஆய்வில், ஃபைசர் தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது, இரண்டு மடங்கு அதிகமான வைரஸ் நடுநிலைப்படுத்தும் செயல்பாட்டுடன், ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு (Coronavirus Panadamic) எதிராக ஸ்புட்னிக் V வலுவான பாதுகாப்பைக் கொடுக்கிறது.
ஸ்புட்னிக் V ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு வலுவான நடுநிலையான ஆன்டிபாடி பதிலைத் தூண்டுகிறது, மேலும் ஸ்புட்னிக் லைட் ஒரு பூஸ்டராக வலுப்படுத்துகிறது.
ALSO READ | Sputnik light கோவிட் தடுப்பூசி டிசம்பரில் இந்தியாவில் அறிமுகம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR