தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?

BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 14, 2024, 10:36 AM IST
 • இன்று பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
 • பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் வெளியிட்டது.
 • பாஜக முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது? title=

BJP Manifesto 2024: பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் "Sankalp Patra" என்று அழைக்கப்படும் பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 27 உறுப்பினர்களைக் கொண்டு இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளராகவும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். தேர்தல் அறிக்கையுடன் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கி காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 'கை' நழுவிப்போகும் அமேதி: சுதாரிக்குமா காங்கிரஸ்? களமிறங்குவாரா ராகுல் காந்தி?

அம்பேத்கர் பிறந்த நாளில் தங்களது தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது பாஜக. "வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடன் தேர்தல் அறிக்கை இன்று வெளியிட்டு இருக்கிறோம். தேர்தல் அறிக்கை தயாரிக்க துணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி. லட்சக்கணக்கான மக்கள் பாஜக அமைதி நம்பிக்கை வைத்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பாஜகவின் தேர்தல் அறிக்கைக்காக நானும் முழுவதும் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் பெண்கள் ஏழைகள் விவசாயிகள் ஆகியோரை மையமாகக் கொண்டு இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது" என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பாஜகவின் 2024 தேர்தல் அறிக்கை:

 • பாஜகவின் தேர்தல் அறிக்கை இளம் இந்தியாவின் இளைஞர்களின் விருப்பத்தின் பிரதிபலிப்பாகும் என்று பிரதமர் மோடி கூறினார்.
 • இலவச ரேஷன் திட்டம் வரும் ஐந்து ஆண்டுகளில் தொடரும்.
 • ஜனஉஷதி மையங்கள் விரிவடையும்.
 • ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச சிகிச்சை தொடர்ந்து கிடைக்கும்.
 • 70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு முதியவரும் ஆயுஷ்மான் யோஜனாவின் கீழ் காப்பீடு செய்யப்படுவார்கள். 
 • மேலும் 3 கோடி வீடுகள் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 • கடந்த 10 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். திருநங்கைகளையும் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
 • கடந்த 10 ஆண்டுகளாக பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வரும் ஐந்தாண்டுகள் பெண்களின் பங்கேற்பைப் பற்றியதாக இருக்கும்.
 • உஜ்வாலா திட்டம் மேலும் தொடரும். ஜன் ஔஷதி மையங்களில் மலிவான மருந்துகள் தொடர்ந்து கிடைக்கும்.
 • சூர்யா கர் இலவச மின்சார திட்டம் தொடரும். பிரதமர் கிசான் சம்மன் நிதி எதிர்காலத்திலும் தொடரும்.
 • நாட்டில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.
 • பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் விவசாயிகள் தன்னிறைவு அடைய உதவுவோம்.
 • நானோ யூரியாவின் அதிகபட்ச பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
 • இந்தியாவை உணவுப் பதப்படுத்தும் மையமாக மாற்றுவது பாஜகவின் தீர்மானம்.
 • நாட்டில் பழங்குடி சமூகத்தின் பங்களிப்பை அங்கீகரித்து, பழங்குடியினர் பெருமை தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளோம். டிஜிட்டல் ட்ரைப் ஆர்ட் அகாடமி நிறுவப்படும்.
 • 700க்கும் மேற்பட்ட ஏக்லவ்யா பள்ளிகள் கட்டப்படும்.
 • உலகின் பழமையான மொழியான தமிழ் மொழியின் மாண்பை அதிகரிக்க பாஜக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.

மேலும் படிக்க | மோடியின் உத்தரவாதம் vs ராகுலின் உத்தரவாதம்... மக்கள் அதிகம் நம்புவது எதை? - முடிவுகள் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News