தென்னிந்திய மக்கள் மோடியால் தனித்துவிடப்பட்டதாக உணர்கிறேன்; அவர்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே கேரளாவில் போட்டி: ராகுல்காந்தி
2019 மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல்காந்தி...
> நியாய் எனப்படும் குறைந்தபட்ச வருவாய் மூலம் ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும்.
> நியாய் திட்டத்தால் நாட்டிலுள்ள 20 சதவீதம் ஏழைக்குடும்பங்கள் பயனடையும்.
> பண மதிப்பிழப்பு திட்டத்தின் பாதிப்புகளை சரிசெய்யும் வகையில் நியாய் திட்டம் இருக்கும்.
> கிராம ஊராட்சிகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
> புதிய தொழில்தொடங்க 3 ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் பெற தேவையில்லை.
> 2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டிலிருந்து வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
> பயங்கரவாதத்தை ஒழிக்க முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
> 100 நாள் வேலைதிட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
> தற்போது அமலில் உள்ள GST முறை மாற்றப்படும். வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும்.
> காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலங்கை உடனான மீனவர் பிரச்னை முழுமையான தீர்க்கப்படும்.
> அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
> ரஃபேல் போர் விமான முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.
> பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்வரப்படும்.
> புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
> தற்போது அமலில் உள்ள ஜிஎஸ்டி முறை மாற்றப்படும்; வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும்.
> தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு அதற்கு மாற்றாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும்.
> விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தக்கல செய்யப்படும். விவசாயக் கடன்களை திரும்பி செலுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றம் ஆகாது.
> குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும்.
> மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள்
விரைவில் நிரப்பப்படும்.
Delhi: Congress party releases their election manifesto for #LokSabhaElections2019 pic.twitter.com/fccNKOuSqZ
— ANI (@ANI) April 2, 2019
இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சரம் செய்து வருகிறது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு மொத்தத்துக்குமான அறிக்கையாக வெளியாக உள்ள இதில் பல மக்கள் வளர்ச்சி திட்டங்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையானது இன்று டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் வெளியிடப்படவுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் நாட்டுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விவசாயிகளுக்கும் ஏழை எழிய மக்களுக்கு பயனுள்ள வகையில் அமையுமா என்று மக்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.