பாகிஸ்தான் ராணுவத்தின் பிடிபட்டு மீட்கப்பட்ட அபிநந்தன் வரத்மான் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தினார்.
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் பயங்கரவாதிகள் நடத்தினர். தீவிரவாதிகளில் இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து எதிர் தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலின் போது இந்திய போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் சென்ற விமானப்படை வீரர் அபிநந்தன் வரத்மானை பாகிஸ்தான் சிறைபிடித்தது.
இந்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு தாயகம் திரும்பிய அபிநந்தன் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை நடைமுறைகள் முடிந்ததையடுத்து ஒருமாதம் ஓய்வுக்கு பின்னர் பணிக்கு திரும்பினார்.
Congress Lok Sabha leader, Adhir Ranjan Chowdhury in Lok Sabha: Wing Commander Abhinandan Varthaman should be awarded and his moustache should be made 'national moustache'. (file pic of Abhinandan Varthaman) pic.twitter.com/0utFf61wwl
— ANI (@ANI) June 24, 2019
இந்நிலையில், பாகிஸ்தானிடம் பிடிபட்டு மீட்கப்பட்ட அபிநந்தன் வரத்மானுக்கு உயரிய விருது அளித்து கவுரவிக்க வேண்டும். அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் MP-க்கள் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தினார்.