நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும், ”பராக்கிரம் திவஸ்” அதாவது, பராக்கிரம தினமாக, கொண்டாடப்படும் என மத்திய கலாச்சார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
"நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்தநாளில் இந்த மாமனிதர், தேசத்திற்கு ஈடு இணையற்ற பங்களிப்பை இந்திய மக்கள் அன்புடன் நினைவில் கொள்கிறார்கள். நேதாஜியின் 125 வது பிறந்த தினத்தை தேசிய மற்றும் சரவதேச நிலையில், 2021 ஜனவரி முதல் சிறப்பான வகையில் கொண்டாட மத்திய அரசு (Central Government) முடிவு செய்துள்ளது" என அமைச்சகம் கூறியது.
Government of India has decided to celebrate the birthday of Netaji Subhash Chandra Bose, on 23rd January, as 'Parakram Diwas' every year: Ministry of Culture pic.twitter.com/Cg0P8gjyFt
— ANI (@ANI) January 19, 2021
ஜனவரி 23, 2021 முதல் இந்த ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்த நரேந்திர மோடி அரசு ஏற்பாடுகள் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலங்களில், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் தைரியம் மற்றும் தியாகத்தை குறிப்பிட்டு, அவருக்கு உரிய மரியாதை அளிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதுடெல்லியின் (New Delhi) செங்கோட்டையில் நேதாஜி குறித்த ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர், நேதாஜியில் சென்ற பிறந்த நாளான 23.01.2019 அன்று திறந்து வைத்தார்.
கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடத்தில் நடைபெற உள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 23 அன்று மேற்கு வங்காளத்திற்கு செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | குடியரசு தின விழா அணிவகுப்பில் கம்பீரமாக இடம்பெற உள்ள ரபேல் விமானம்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR