புது டெல்லி: பஞ்சாபில் விஜயதாசாமி நாளன்று ராவணனின் உருவப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை வைத்து எரித்த சம்பவத்தை அடுத்து பாஜக மற்றும் காங்கிரஸ் (Congress) இடையே கடுமையான மோதல் தொடங்கியுள்ளது. பஞ்சாபில் இந்த நாடகம் நடந்ததற்கு ராகுல் காந்தி தான் காரணம் என்று பாஜக தலைவர் ஜே.பி.நடா (J.P. Nadda) தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வெட்கக்கேடானது, ஆனால் இது எதிர்பாராதது அல்ல என்று நட்டா கூறினார்.
அதே நேரத்தில், இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி, "பிரதமர் மோடியின் உருவ பொம்பை பஞ்சாப் முழுவதும் எரிக்கப்பட்டது. பிரதமர் மீதான மக்கள் கோபம் பஞ்சாபில் இந்த நிலையை எட்டியிருப்பது வருத்தமளிப்பதாக இருக்கிறது. பிரதமர் மோடி இந்த மக்களுடன் பேச வேண்டும் என ராகுல் காந்தி (Rahul Gandhi) கூறியுள்ளார்.
This happened all over Punjab yesterday. It’s sad that Punjab is feeling such anger towards PM.
This is a very dangerous precedent and is bad for our country.
PM should reach out, listen and give a healing touch quickly. pic.twitter.com/XvH6f7Vtht
— Rahul Gandhi (@RahulGandhi) October 26, 2020
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை பஞ்சாபில் பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட விவசாயிகள் அமைப்பு இராவணனின் உருவத்தில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை வைத்து எரித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு காங்கிரஸ் தான் காரணம் எனவும் சாடியுள்ளார்.
One dynasty’s deep personal hatred against a person who was born in poverty and became PM is historic. Equally historic is the love people of India have showered upon PM @narendramodi. More Congress’ lies and hate increases, the more people will support PM Modi!
— Jagat Prakash Nadda (@JPNadda) October 26, 2020
ALSO READ | ‘பாஜக தமிழ் கலாச்சாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் எதிரி’ ஸ்டாலினின் காட்டமான பதில்!!
பிரதமரின் உருவ பொம்மையை எரிப்பது குறித்து ராகுல் காந்தி இயக்கிய நாடகம் பஞ்சாபில் நிறைவேற்றப்பட்டது வெட்கக்கேடானது. ஆனால் எதிர்பாராதது அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, நேரு-காந்தி வம்சம் பிரதமர் அலுவலகத்தை மதிக்கவில்லை. 2004-2014 யுபிஏ ஆண்டுகளில் பிரதமரின் அதிகாரத்தை நிறுவன ரீதியாக பலவீனப்படுத்தப்பட்டது.
On freedom of speech, Congress can never pontificate to others. They have contempt for dissenting voices for decades. We saw glimpses of it during the Emergency. Later on, the Rajiv Gandhi government made a brazen attempt to weaken press freedom. A free press rattles Congress.
— Jagat Prakash Nadda (@JPNadda) October 26, 2020
வறுமையில் பிறந்து பிரதமரான (Prime Minister Narendra Modi) ஒரு நபர் மீது ஒரு குடும்பத்தின் வெறுப்பு அரசியல் என்றும், பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்திய மக்கள் கொண்டுள்ள அன்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் கூறினார். காங்கிரஸ் வெறுப்பு எவ்வளவு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்பார்கள் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
ALSO READ | வேளான் மசோதா: திருச்சி மற்றும் தாம்பரத்தில் தமிழக விவசாயிகள் போராட்டம்!!
பஞ்சாபில் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக நீண்ட நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக, பிரதமர் மோடியின் உருவங்கள் ஞாயிற்றுக்கிழமை பஞ்சாபில் எரிக்கப்பட்டன.
Perhaps the most unique Dussehra ever - in Punjab.
— rkhuria2 (@rkhuria2) October 25, 2020