Old Pension Scheme: விரைவில் அரசு தரப்பிலிருந்து சூப்பர் செய்தி?

Old Pension Scheme: ஒட்டுமொத்த நாட்டின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, புதிய ஓய்வூதிய முறையில் பல சலுகைகளை வழங்க மோடி அரசு பரிசீலிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 26, 2023, 09:27 PM IST
  • புதிய ஓய்வூதியத் திட்டத்தில் என்ன பிரச்சனை?
  • பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அதிக ஓய்வூதியம் கிடைக்கும்.
  • இரு திட்டங்களின் ஓய்வூதியத் தொகையிலும் பெரிய வித்தியாசம் உள்ளது.
Old Pension Scheme: விரைவில் அரசு தரப்பிலிருந்து சூப்பர் செய்தி? title=

பழைய ஓய்வூதியத் திட்டம்: நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய முறைக்கான தேவை அதிகரித்து வருகிறது. புதிய ஓய்வூதிய முறையுடன் ஒப்பிடும்போது, ​​பல மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், பல மாநிலங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) அமல்படுத்தியுள்ளன. இதற்கிடையில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் மத்திய அரசு பெரிய முடிவை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒட்டுமொத்த நாட்டின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, புதிய ஓய்வூதிய முறையில் பல சலுகைகளை வழங்க மோடி அரசு பரிசீலிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓய்வூதிய முறையை சீர்திருத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டம் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது

ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், புதிய ஓய்வூதிய முறை நிறுத்தப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதிய அமைப்பில் மாற்றங்கள்

அரசு கருவூலத்தில் சுமையை ஏற்படுத்தாமல், தற்போதுள்ள ஓய்வூதிய முறையில் மாற்றம் கொண்டு வந்து, ஊழியர்கள் நஷ்டம் அடையாமல் அரசாங்கம் கவனித்துக்கொள்ள வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரி வருகின்றனர். தற்போது, ​​புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஒரு நபர் பணிபுரியும் ஆண்டுகளில் டெபாசிட் செய்த தொகையில் 60 சதவீதத்தை ஓய்வு நேரத்தில் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது. இதற்கு முற்றிலும் வரி விலக்கு கிடைக்கும். மீதமுள்ள 40 சதவீதம் வருடாந்திரத்தில் முதலீடு செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | 2000 ரூபாயை கள்ள நோட்டா என்று பார்ப்பது எப்படி? - ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள்

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் என்ன பிரச்சனை?

ஓய்வூதியத்தின் போது, ​​ஊழியர்கள் பெரும் தொகையை அதாவது சுமார் 41.7 சதவீத பங்களிப்பை மொத்தமாக திரும்பப் பெறும் வகையில் என்பிஎஸ்-ல் அரசாங்கம் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். இந்த மாதிரி ஓபிஎஸ்ஸுக்கு நேர்மாறானது என்றும், இதுதான் இதில் உள்ள ஒரே பிரச்சனை என்றும் ஒரு அதிகாரி கூறினார். 

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அதிக ஓய்வூதியம் கிடைக்கும்

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதன் காரணமாக ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்கக் கோருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக பாதி சம்பளம் கிடைக்கும். அதே நேரத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தில், ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் + டிஏ பிடித்தம் செய்யப்படுகிறது. 
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், ஊழியர்களின் சம்பளத்தில் எந்தப் பணமும் பிடித்தம் செய்யப்படுவதில்லை. இது தவிர, புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு டிஏ பெறுவதற்கான விதிமுறை இல்லை. இது தவிர, அரசின் கருவூலத்திலிருந்து பழைய ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது. அதே நேரத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் இல்லை.

இரு திட்டங்களின் ஓய்வூதியத் தொகையிலும் பெரிய வித்தியாசம் உள்ளது

பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பற்றி பேசுகையில், ஓய்வு பெற்ற ஊழியர் இறந்த பிறகும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. உதாரணமாக, ஒரு ஊழியர் இப்போது ரூ.80,000 சம்பளம் வாங்குகிறார் என்றால், ஓய்வுக்குப் பிறகு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அவருக்கு சுமார் ரூ.35 முதல் 40 ஆயிரம் வரை ஓய்வூதியம் கிடைக்கும். புதிய ஓய்வூதியத்தில் இந்த ஊழியருக்கு சுமார் 800 முதல் 1000 ரூபாய் வரை ஓய்வூதியம் கிடைக்கும்.

மேலும் படிக்க | 8th Pay Commission:வருகிறதா அடுத்த ஊதியக்கமிஷன்? அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News