கர்நாடக வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.2000 கோடி ஒதுக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் HD குமாரசாமி, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்!
கார்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநிலத்தின் மங்களூரு, குடகு, மைசூரு, உத்தர் கன்னடா ஆகிய மாவட்ங்களில் சுமார் 7500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இரண்டு நாட்களுக்கு முன்னர் நேரில் ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின்னர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும் ராணுவ வீரர்களின் உதவியுடன் மீட்பு பணி தொடர்ந்து நடைப்பெறும் எனவும் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். 2,200 வீடுகள் சேதமடைந்துள்ளன. 500-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் சேதமடைந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு 53 முகாம்களில் சுமார் 7,500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட ஆய்வின்படி, ரூ.3000 கோடி வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ள நிவாரண நிதியாக ரூ.2000 கோடியினை மத்தியி அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் HD குமாரசாமி அவர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ந்நிலையில் இன்று கர்நாட்டக முதல்வர் குமாரசாமி அவர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டதினை வான்வழி மார்கமாக ஆய்வு மேற்கொண்டார்.
948 மீட்பு படை வீரர்களின் உதவியோடு இதுவரை 1250 பேர் மீட்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.