அயோத்தியில் கோவில்; மகாராஷ்டிராவில் ஆட்சி -சஞ்சய் tweet...

அயோத்தி ராம்ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் ’அயோத்தியில் கோவில்; மகாராஷ்டிராவில் ஆட்சி’ என சூசகமாக தெரிவித்துள்ளார்.

Last Updated : Nov 9, 2019, 03:32 PM IST
அயோத்தியில் கோவில்; மகாராஷ்டிராவில் ஆட்சி -சஞ்சய் tweet... title=

அயோத்தி ராம்ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் ’அயோத்தியில் கோவில்; மகாராஷ்டிராவில் ஆட்சி’ என சூசகமாக தெரிவித்துள்ளார்.

அயோத்தி சர்ச்சைக்குறிய நில தகதாறு (நிர்மோஹி அகாரா, உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம் மற்றும் ராம்லல்லா விராஜ்மான் இடையேயான 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை பங்கீடுதல் குறித்த) வழக்கில் கடந்த 2010 செப்டம்பர் 30, அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை வழங்கியது. அலகாபாத் உத்தரவை மேல்முறையீடு செய்யும் விதமாக இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்றது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷண், மற்றும் எஸ் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு அன்றாட விசாரணை அடிப்படையில் விசாரித்து அக்டோபர் மாதம் தனது தீர்ப்பினை முன்பதிவு செய்தது. 

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பினை தலைமை நீதிபதி ரன்சன் கோகாய் தலைமையிலான அரசியலமைப்பு பென்ச் இன்று அறிவித்தது. இந்த தீர்ப்பில் சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "பெஹ்லே மந்திர், ஃபிர் சர்க்கார். அயோத்தி மே மந்திர், மகாராஷ்டிரா மெய் சர்க்கார். ஜெய் ஸ்ரீ ராம் (முதலில் ஒரு கோயில் பின்னர் அரசு. அயோத்தியில் கோயில், மகாராஷ்டிராவில் அரசு)" என குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா- பாஜக இடையே தொடர்ந்து அதிகாரப் பகிர்வு தொடர்பாக மோதல் நீடித்து வருகிறது. 

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில், பாஜக, மாநிலத்தில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. நடந்து முடிந்த மாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56, ஷரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54, மற்றும் காங்கிரஸ் 44 இடங்களையும் வென்றது. அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமை கோர, ஒரு கட்சிக்கு 145 இடங்கள் தேவை. ஆனால் எந்தொரு கட்சியும் தனி பெருமை கொண்டிருக்காத நிலையில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

161 ஒருங்கிணைந்த இருக்கை வலிமை கொண்ட பாஜக மற்றும் சிவசேனா ஆகியவை மகாராஷ்டிராவில் எளிதில் கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருக்க முடியும், ஆனால் அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பிளவு காரணமாக, தாமதம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவி தொடர்பாக இரு கட்சிகளும் கடும் மோதலில் அடைக்கப்பட்டுள்ளன. 50:50 சூத்திரத்தின் கீழ் ஒரு அரசாங்கத்தை அமைக்க சிவசேனா விரும்புகிறது, ஆனால் சிவசேனாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது என்று பாஜக தெளிவாகக் கூறியுள்ளது.

இதனிடையே சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஆதரவையும் பெறலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. இருப்பினும், அவர்களது கட்சிகளின் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ஷரத் பவார் இதற்கு இன்னும் பச்சை சமிக்ஞை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News