மீண்டும் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா; இரண்டு புதிய வகை COVID தொற்று கண்டுபிடிப்பு!

ஒரே நாளில் 6000-க்கும் மேற்பட்ட புதிய COVID-19 தொற்றுக்களை பதிவு செய்துள்ளது மகாராஷ்டிரா. மேலும், இரண்டு புதிய வகை கொரோனாக்கள் கண்டுபிடிப்பு..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 20, 2021, 10:27 AM IST
மீண்டும் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா; இரண்டு புதிய வகை COVID தொற்று கண்டுபிடிப்பு! title=

ஒரே நாளில் 6000-க்கும் மேற்பட்ட புதிய COVID-19 தொற்றுக்களை பதிவு செய்துள்ளது மகாராஷ்டிரா. மேலும், இரண்டு புதிய வகை கொரோனாக்கள் கண்டுபிடிப்பு..!

மாநில அரசின் சுகாதாரத் துறையின் (state government Health Department) தரவுகளின்படி, மகாராஷ்டிராவில் 6,112 புதிய கொரோனா வைரஸ் நோய்கள் பதிவாகியுள்ளன. மேலும், 44 பேர் புதிய வகை COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6,112 புதிய கொரோனா தொற்றுகள் (coronavirus) பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் இருந்து 44 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 51,713 ஆக உள்ளது.

மகாராஷ்டிராவில் (Maharashtra) தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 44,765 ஆக உள்ளது. தலைநகர் மும்பையைப் (Mumbai) பொருத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 823 புதிய பாதிப்புகள் மற்றும் ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன. நகரில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 3,17,310 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 11, 437 ஆகவும் உள்ளது. 

ALSO READ | பதஞ்சலியின் Coronil: WHO திட்டத்தின் கீழ் சான்றிதழ் அளித்தது ஆயுஷ் அமைச்சகம்

கவலைக்குரிய ஒரு காரணியாக, ஆராய்ச்சியாளர்கள் கிழக்கு மகாராஷ்டிராவின் அமராவதி மற்றும் யவத்மால் மாவட்டங்களில் இருந்து கொரோனா வைரஸ் (COVID-19) மாதிரிகளில் இரண்டு புதிய வகைகளைக் கண்டறிந்துள்ளனர். அவை நோய்எதிர்ப்பு சக்தியை வீழ்த்தி தப்பிக்க முடியும். கடந்த ஒரு வாரத்தில் புதிய பாதிப்புகளில் கணிசமான அதிகரிப்பு காட்டிய மாவட்டங்களில் யவத்மால் மற்றும் அமராவதி ஆகியவை அடங்கும்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், யவத்மால் மாவட்ட நிர்வாகம் பிப்ரவரி 18 முதல் பத்து நாள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது. விதர்பா பிராந்தியத்தின் அமராவதி மாவட்டத்தில் நாளை இரவு 8 மணி முதல் திங்கள் காலை 7 மணி வரை வார இறுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News