புதுடெல்லி: அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை ஜனவரி 17 முதல் தொடங்குகிறது. இந்த பண்டிகைக் கால விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற வகை தயாரிப்புகளுக்கு தள்ளுபடியை அமேசான் வழங்குகிறது.
ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் (ecommerce company Amazon) புதன்கிழமை (ஜனவரி 12) வரவிருக்கும் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனைக்கான தேதிகளை வெளியிட்டது. இந்த விற்பனை ஜனவரி 17 முதல் ஜனவரி 20 வரை நடைபெறும். Amazon Prime பயனர்களுக்கு, விற்பனை ஒரு நாள் முன்னதாகவே தொடங்கும்.
அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை: ஸ்மார்ட்போனில் சலுகைகள்
அமேசானின் கிரேட் குடியரசு தின விற்பனைக்கான லேண்டிங் பக்கம், வாடிக்கையாளர்கள் 12 மாதங்கள் வரை விலையில்லா EMI இல் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும் என்று தெரிவிக்கிறது. சிறந்த ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 40% வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது.
அமேசான் மடிக்கணினிகளில் 40% வரை தள்ளுபடியை வழங்குகிறது, அதே நேரத்தில் ஹெட்ஃபோன்கள் விற்பனை நாட்களில் ரூ.299 ஆரம்ப விலையில் விற்கப்படும். ஸ்மார்ட்வாட்ச்களை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் 60% தள்ளுபடியையும் பெறலாம்.
விற்பனை நாட்களில், கிச்சன் மற்றும் டைனிங் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் 18 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் EMI இல் பொருட்களை வாங்கலாம்.
விற்பனை அட்டை சலுகைகள்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு 10% தள்ளுபடி கிடைக்கும். இருப்பினும், வங்கி தள்ளுபடிகள் குறித்த முழுமையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இன்னும் வெளியாகவில்லை.
வாடிக்கையாளர்கள் தங்களின் பஜாஜ் ஃபின்சர்வ் கார்டுகளைப் பயன்படுத்தி நோ-காஸ்ட் EMIகளிலும் பொருட்களை வாங்கலாம். கூடுதல் தள்ளுபடியைப் பெற வாடிக்கையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை எக்ஸ்சேஜ்ச் ஆஃபரையும் பயன்படுத்திக் கொள்ளலாம்...
ALSO READ | வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கணுமா? முந்துங்கள்: 10% விலை உயர்வு விரைவில்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR