Credit Card: பல கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதால் credit score பாதிக்கப்படுமா?

கிரெடிட் கார்டுகளில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுக்காக பல கடன் அட்டைகளை வாங்கும் போக்கு உள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 30, 2021, 01:29 PM IST
  • கிரெடிட் கார்டுகளில் பல கவர்ச்சிகரமான அம்சங்கள் உள்ளன
  • கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது, இலவச பயணம், திரைப்பட டிக்கெட்டுகள் கிடைக்கும்
  • கிரெடிட் ஸ்கோர் அடிக்கடி சரிபார்க்கப்படும்போது, சம்பந்தப்பட்டவர் அதிக கடன்களை வாங்க விரும்புகிறார் என்று பொருள்
Credit Card: பல கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதால் credit score பாதிக்கப்படுமா?   title=

கிரெடிட் ஸ்கோர் என்பது, கடன்களை செலுத்துவதற்கான ஒருவரின் திறனை மதிப்பிடுவதற்கு உதவும் ஒரு தரவு. ஒருவர் கடன் வாங்கும் போது அல்லது கடன் வாங்குவதற்கான விண்ணப்பம் அளிக்கும் போது கடன் வழங்குபவர் cedit score எனப்படும் கடன் மதிப்பீட்டை முதலில் ஆய்வு செய்வார்.

கிரெடிட் கார்டுகளில் பல கவர்ச்சிகரமான அம்சங்கள் சேர்ந்துவிட்டன. தொடக்கக் காலத்தில் கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டையானது, குறிப்பிட்ட சில விஷயங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டது. தற்போது கிரெடிட் கார்டுகளில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுக்காக பல கடன் அட்டைகளை வாங்கும் போக்கு உள்ளது. 

உதாரணமாக ஒரு குறிப்பிட்ட கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது, இலவச பயணம், திரைப்பட டிக்கெட்டுகள் கிடைக்கும். வேறு சில கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் விலையில் தள்ளுபடி கிடைக்கும்.

Also Read | 45 லட்சம் ஏர் இந்தியா பயணிகளின் Credit Card உள்ளிட்ட விவரங்கள் திருட்டு

சில கிரெடிட் அட்டைகளை பயன்படுத்தி ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) வலைதளத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்தால் சலுகைகள் கிடைக்கும். எனவே சிலர் வகைக்கு ஒன்றாக பல கடன் அட்டைகளை வாங்குவார்கள். ஆனால், அதிகமான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதால், கிரெடிட் ஸ்கோர் எனப்படும் கடன் வாங்கும் திறன் பாதிக்கப்படும் என்ற அச்சமும் பலருக்கு எழுகிறது.

கடன் வாங்கும் திறன் (credit score) எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதை புரிந்துக் கொண்டால் இந்த சந்தேகம் தீர்ந்துவிடும்.  சில அம்சங்களின் அடிப்படையில் கிரெடிட் ஸ்கோர் தீர்மானிக்கப்படுகிறது.  

கடனை திருப்பி செலுத்திய பதிவுகள், எதற்காக கடன் வாங்கப்பட்டது? எத்தனை ஆண்டுகளாக கடன் வாங்குகிறார் மற்றும் எந்த வகையிலான கடன்கள் வாங்கப்பட்டன என்பதன் அடிப்படையில் credit score தீர்மானிக்கப்படுகிறது.

Also Read | எந்த வங்கியின் credit card அதிக அளவில் விற்பனையானது?

ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது கடன் விசாரணைகள் மற்றும் கடன் பயன்பாட்டை பாதிக்கிறது. இந்த இரண்டுமே credit scoreஇல் 40 சதவீதமாகும். கடனைப் பற்றி விசாரிக்கும் போதெல்லாம், கடன் வழங்குபவர் உங்கள் கடன் மதிப்பெண்ணை சரிபார்க்கிறார்.

கிரெடிட் ஸ்கோர் மீண்டும் மீண்டும் சரிபார்க்கப்படும்போது, சம்பந்தப்பட்டவர் அதிக கடன்களை வாங்க விரும்புகிறார் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இதுவும் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம். ஆனாலும்கூட இது ஓரிரண்டு புள்ளிகள்  மட்டுமே குறைக்கும்.

கிரெடிட் ஸ்கோரை நிர்ணயிப்பதில் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறோம் என்பதும் முக்கியம். கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன்களை வாங்கினால், அது கிரெடிட் ஸ்கோரைக் குறைக்கும். 

Also Read |  டக் தே புயலால் தரைதட்டிய கப்பலில் எண்ணெய் கசிவு; மீன்பிடி தொழில் பாதிப்பு

ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு வைத்திருந்தாலும், கவனமாக பயன்படுத்தினால், கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.  ஆச்சரியமாக இருக்கிறதா?

உதாரணமாக ஒரு கிரெடிட் கார்டின் அதிகபட்ச வரம்பு 1 லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொண்டால், அதன் முழு வரம்பைப் பயன்படுத்தினால், கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறைவாக இருக்கும்.

மற்றொரு கிரெடிட் கார்டை வாங்கி, அதன் அதிகபட்ச வரம்பு ஒரு லட்சம் ரூபாய் என்றால், உங்கள் மொத்த கடன் வரம்பு 2 லட்சம் ரூபாயாக கருதப்படும். அப்போது இரண்டு லட்சத்தில் உங்கள் கடன் ஒரு லட்சம் என்பதால் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் அதிக பாதிப்பு வராது.

தேவையில்லாமல் அதிக கிரெடிட் கார்டுகள் வாங்குவதை தவிர்ப்பது, கிரெடிட் ஸ்கோருக்கு மட்டுமல்ல, உங்கள் மன நிம்மதிக்கும் உகந்தது. கடன் வரம்பு எவ்வளவு இருந்தாலும், முடிந்த அளவு அதை குறைவாகப் பயன்படுத்துங்கள்.

Also Read | முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி காலமானார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News