தனியார் வேலைகள் பற்றி பேசுகையில், காலை ஷிப்ட், மதிய ஷிப்ட் மற்றும் நைட் ஷிப்ட் உள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் பலர் இரவு ஷிப்டுகளில் வேலை செய்ய விரும்புகிறார்கள். வெளி வேலைகளை பகலில் பார்ப்பதற்கு இது வசதியான வேலை நேரம் என நினைக்கிறார்கள்.
நைட் ஷிப்டில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அதிக சம்பளத்தை வழங்கும் பல நிறுவனங்களும் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இரவு ஷிப்டில் தொடர்ந்து வேலை செய்தால், அது உங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இரவு ஷிப்டில் பணிபுரிவது உங்களுக்கு பல வித நோயை ஏற்படுத்தும். இது உங்கள் திருமண வாழ்க்கையை பாதிக்கக் கூடும்.
இரவில் வேலை செய்யும் நபருக்கு நல்ல தூக்கம் வராது, இதன் காரணமாக விந்து உருவாகும் செயல்முறை மிகவும் பலவீனமாகிறது. அத்தகைய சூழ்நிலையில் ஆண்மைக் குறைவு பிரச்சினை ஏற்படலாம். இரவில் வேலை செய்வது உடலின் டி என் ஏ, அதாவது மரபணு செயல்பாடுகளுக்கு இடையூறாக இருக்கிறது. இரவு ஷிப்டில் வேலை செய்யும் மக்களுக்கு, தினமும் சாப்பிடும் பழக்கமும் வேறுபட்டு இருக்கும் காரணமாக, அவர்கள் பெரும்பாலும் செரிமான பிரச்சனை மற்றும் வயிறு தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள், மேலும் நாள் முழுவதும் தலைவலி, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
மெலடோனின் என்ற ஹார்மோன் இரவில் தான் உற்பத்தியாகிறது. இரவில் உற்பத்தியாகும் இந்த மெலடோனின் குறைபாடு காரணமாக குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும். மெலடோனின் ஹார்மோன் உற்பத்திக்கு மருந்து ஏதும் கிடையாது. அது இயற்கையாக சுரக்கும் ஒரு ஹார்மோன். மேலும், இரவு நேரம் விழித்திருந்து வேலை செய்தல் தொடர்பாக அராய்ச்சி செய்த ஒரு புற்றுநோய் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர், இரவு நேரம் வேலை செய்பவர்களின் சிறுநீர் கழித்தலில் 8-OH-DG அளவைக் கணிசமாகக் குறைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
ALSO READ | நன்றாக சாப்பிட்டாலும் ரொம்ம்ப சோர்வா இருக்கீங்களா? இந்த தகவல் உங்களுக்கு தான்…!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR