நீண்ட தூரம் பயணம் செய்வது என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று, பயணம் என்றாலே பலரும் உற்சாகமாக காணப்படுவார்கள். பயணத்திற்கு முன்னர் என்னென்ன தேவைகள் என்பதை சரிபார்த்து கொண்டு தயாராவது வழக்கமான ஒன்று, அதேபோல பயணத்திற்கு முன்னர் சிலர் தனக்கு பிடித்த உணவுகளை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அப்படி நாம் பயணத்திற்கு முன்னர் சாப்பிடக்கூடிய சில உணவு வகைகள் நமது முழு ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் சாப்பிடும் உணவு ஆரோக்கியத்தில் மட்டுமின்றி மனநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ரயில், விமானம், கார் அல்லது பேருந்து என எந்த வாகனத்தில் பயணம் செய்தாலும் சரி, பயணிப்பதற்கு முன்னர் நீங்கள் சாப்பிடும் உணவில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். ஏனென்றால், சில உணவுகளை சாப்பிடுவது வாயு அல்லது வீக்கம் போன்ற சிறிய உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
நீண்ட தூரம் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால் நீங்கள் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதிகமான உணவை சாப்பிட்டுவிட்டு விமானத்தில் பறந்தால் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனை ஏற்படும். பயணம் செய்வதற்கு முன்னர் லேசாக சாப்பிடுங்கள், தண்ணீர் அல்லது பழச்சாறு போன்ற ஆரோக்கியமான திரவங்களை எடுத்து கொள்ளலாம். இப்போது பயணம் செய்யும் முன்பு நீங்கள் எந்த மாதிரியான உணவுகளையெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது பற்றி இங்கே காண்போம்.
மேலும் படிக்க | இவை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்! ஜாக்கிரதை!
1) பெரும்பாலான மக்களுக்கு சீஸ் மற்றும் சீஸ் கலந்த உணவுப்பொருட்கள் பிடிக்கும், ஆனால் சீஸ் ஜீரணிக்க கடினமாக இருப்பதால் வாயு பிரச்சனை உருவாகிறது. அதனால் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் சீஸ் நிரப்பப்பட்ட உணவு வகைகளை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
2) பர்கர்கள் அல்லது வறுத்த உணவு வகைகளை பயணத்தின் முன்னர் சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படும். சீஸி ஹாம்பர்கர் போன்ற துரித உணவுகளை உட்கொள்வது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்தாலும் அது இரைப்பை பிரச்சனை மற்றும் உடல் எடையை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
3) குளிர்பானங்கள் செரிமானத்திற்கு உதவும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. சோடா மற்றும் குளிர் பானங்கள் போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்கள் இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
4) செயற்கை இனிப்புகள் மிட்டாய்கள் மற்றும் சூயிங்கம் சாப்பிடுவதற்கு நன்றாக இருந்தாலும், இந்த மிட்டாய்களில் உள்ள செயற்கை இனிப்புகள் உங்கள் பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதனை மெல்லும்போது காற்று உங்கள் வாய்க்குள் நுழைந்து, வாயு பிரச்சனை உருவாகிறது.
5) காரமான உணவுகள் காரமான குழம்புகளை சாப்பிடுவது உங்கள் வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்தும், இதனால் சிலருக்கு பயணத்தின் போது வயிற்று வலி ஏற்படும். எனவே பயணம் செய்பவர்கள் காரமாக சாப்பிடாமல் எளிமையான மற்றும் லேசான உணவுகளை சாப்பிடலாம்.
6) நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாவுச்சத்துள்ள உணவுகள் செரிக்க நேரமாகும், இது வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்தும் என்பதால் நீங்கள் இந்த உணவுவகைகளை தவிர்க்க வேண்டும்.
7) பீர் போன்ற மதுபானங்கள், சோடா மற்றும் ஷாம்பெயின் போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்கள் வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே பயணம் செய்வதற்கு முன் இதுபோன்ற பானங்களை உட்கொள்ளாமல் நீங்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | பொதுவாக காணப்படும் புற்றுநோய்கள்: ஆண்களுக்கு எது?, பெண்களுக்கு எது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ