தொப்பையால் தொல்லையா? சியா விதைகளை இப்படி சாப்பிடுங்க... உடனே பெல்லி ஒல்லியாயிடும்

Weight Loss Tips:  சில இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழிதான் சியா விதைகளின் பயன்பாடு. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 14, 2024, 11:51 AM IST
  • சியா விதைகள் பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன.
  • இவை இதய ஆரோக்கியம், செரிமானம் ஆகியவற்றை சீராக்குவதோடு உடல் பருமனை குறைக்கவும் உதவும்.
  • சியா விதைகளில் உடலின் செயல்பாட்டிற்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.
தொப்பையால் தொல்லையா? சியா விதைகளை இப்படி சாப்பிடுங்க... உடனே பெல்லி ஒல்லியாயிடும்

Weight Loss Tips: உடல் எடையைக் குறைப்பது இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. உடல் எடையை குறைப்பது எளிய விஷயமல்ல. உடல் எடை சட்டென்று அதிகமாகி விடுகின்றது. ஆனால், அதை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கவேண்டியுள்ளது. உடல் பருமனை கட்டுப்படுத்த நமது வாழ்க்கை முறையும் உணவு முறையும் மிகவும் சரியாக இருக்க வேண்டியது மிக அவசியம். 

Add Zee News as a Preferred Source

உடல் பருமனால் அவதியில் உள்ளவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். உடல் எடையை குறைக்கவும், தொப்பை கொழுப்பை குறைக்கவும் சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழிதான் சியா விதைகளின் பயன்பாடு. உடல் எடையை குறைக்க சியா விதைகளை எப்படி பயன்படுத்துவது என இந்த பதிவில் காணலாம். 

எடை இழப்புக்கு சியா விதைகள் (Chia Seeds for Weight Loss)

சியா விதைகள் பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள விதைகளில் ஒன்றாகும். இவை இதய ஆரோக்கியம், செரிமானம் ஆகியவற்றை சீராக்குவதோடு உடல் பருமனை (Obesity) குறைக்கவும் உதவும். சியா விதைகளில் உடலின் செயல்பாட்டிற்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவற்றில் உள்ள  ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலில் நாள்பட்ட நோய்களை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும். 

குறிப்பாக, தொப்பை கொழுப்பு (Belly Fat), உடல் பருமன் ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சியா விதைகள் பெரிய அளவில் உதவும். சியா விதைகளை பல்வேறு வழிகளில் நம் உணவில் சேர்க்கலாம். அந்த வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1. சியா விதை நீர் (Chia Seeds Water)

சியா விதைகளை (Chia Seeds) இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதன் நீரை உட்கொள்ளலாம். இதில் சுவையை சேர்க்க, இதனுடன் நறுக்கிய பழங்களைச் சேர்க்கலாம் அல்லது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு பிழிந்து குடிக்கலாம். 

மேலும் படிக்க | முலாம் பழம் ஜூஸ் ரொம்ப பிடிக்குமா... தினமும் குடித்தால் இவ்ளோ நன்மைகள் இருக்கு!

2.சியா விதை மில்க் ஷேக் (Chia Seeds Milk Shake)

இதை செய்ய, 2 ஸ்பூன் சியா விதைகளை விதைகளை இரவில் ஊற வைக்கவும். அடுத்த நாள் காலையில், இந்த ஊறவைத்த விதைகளுடன், 1 வாழைப்பழம், 2 பாதாம், 2 அக்ரூட் பருப்புகள், 10 முதல் 12 மக்கானா, விதைகளை நீக்கிய 2 பேரீச்சம்பழங்கள், 1 டீஸ்பூன் எள், 1 டீஸ்பூன் ஆளி விதை, 1 தேக்கரண்டி பூசணி விதைகள், 1 தேக்கரண்டி ஊறவைத்த கொண்டைக்கடலை, 1 தேக்கரண்டி வறுத்த வேர்க்கடலை ஆகியவற்றை சேர்க்கவும். அதன் பிறகு இவை அனைத்தையும் ஸ்கிம்ட் பாலில் கலக்கவும். 

தினமும் காலை இந்த ஷேக்கை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உங்கள் இடுப்பு மற்றும் வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைந்து எடையும் குறைந்தது 4 கிலோ குறையும்.

3. சியா விதை அல்வா (Chia Seeds Halwa)

சியா விதைகளை அல்வாவாக செய்து சாப்பிடுவது சியா விதைகளை உட்கொள்வதற்கான மற்றொரு எளிய வழியாகும். இந்த விதைகளை பாதாம், சோயா அல்லது தேங்காய் பாலுடன் முந்தைய நாள் இரவு கலந்து வைத்து விடுங்கள். இதில் தேன் அல்லது மேப்பிள் சிரப் சேர்த்து இனிப்பை சேர்க்கலாம். இதை திடமான கஸ்டர்டாக அமைக்க இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். காலையில் இதை எடுத்து, இதில், நாவல் பழம், பாதாம் மற்றும் இலவங்கப்பட்டை தூள், ஏலக்காய் சேர்த்து கலந்து உட்கொள்ளவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வைட்டமின் டி குறைப்பாட்டை தீர்க்க இதை செய்யவேண்டாம்! மருத்துவர்கள் எச்சரிக்கை...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News