தமிழ்நாடு அரசு மீன்வளம் மீனவர் நலத்துறையில் சென்னை மண்டலா மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை பொதுப்போட்டி (முன்னுரிமை பெற்றவர்) பிரிவில் சில தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதிகள்:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1) ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியின் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 37 வரை.
2) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட (முஸ்லீம்) வகுப்பினர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 34 வரை.
3) இதர வகுப்பினருக்கு வயது வரம்பு 18 முதல் 32 வரை.
சம்பளம்:
Level-1 - ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மீன்வளம் மற்றும் மீன்வள நலத்துறை இணை இயக்குநர்(மண்டலம்),
சென்னை அலுவலகம்,
DMS வளாகம் மூன்றாவது தளம்,
தேனாம்பேட்டை,
சென்னை-600006.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 10/01/2022ம் தேதி மாலை 5 மணிக்குள் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 044-24328596 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர் ஜெ.விஜயா ராணி, இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.
ALSO READ | PM Kisan Yojana: உங்களுக்கு ரூ.2000 இன்னும் வரவில்லையா? அப்ப இத பண்ணுங்க
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR