இன்ஸ்டாகிராமில் கசிந்தது ஸ்ருதி ஹாசனின் மாறுபட்ட புகைப்படம்...

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது விகாரமான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Updated: Jun 23, 2020, 03:22 PM IST
இன்ஸ்டாகிராமில் கசிந்தது ஸ்ருதி ஹாசனின் மாறுபட்ட புகைப்படம்...

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது விகாரமான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சமூக ஊடகங்களில் ஆக்டீவாக இருகும் ஸ்ருதி, தற்போது தனது ரசிகர்ளின் கவனத்தை ஈர்க்க, ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எனினும் இந்த புகைப்படத்தில் அவர் சிவப்பு உதட்டுச்சாயத்துடன் காட்சியளிக்கின்றார். இந்த தோற்றத்தில் அவர் வேம்பையர் எனப்படும் இரத்த காட்டேரி போல் காட்சியளிப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். எனினும் இந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தில் நடிகை தனது அழகை மேலும் அழகாகா வெளிப்படுத்தியுள்ளார் என்று தான் கூறவேண்டும். 

READ | Viral Pic: ரவிவர்மாவின் ஓவியங்களாய் மாறிய பிரபல நடிகைகள்..!

சமீப காலமாக ஸ்ருதி நடிப்பில் திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. இறுதியாக அவர்., கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான சிங்கம்-3 திரைப்படத்தில் நடித்திருந்தார். எனினும் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் லாபம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கூடிய விரைவில் அவர் பெரும் திரையில் ரசிகர்களுக்கு காட்சியளிப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

WEIRDO CHECK nets

A post shared by @ shrutzhaasan on

இந்நிலையில் கொரோனா பூட்டுதலுக்கு மத்தியில் மத்தியில், மூத்த நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் சரிகா ஆகியோரின் மகள் ஸ்ருதி, தனது செல்லப் பூனையுடன் விளையாடுவது, சமையல் செய்வது, வீட்டை சுத்தம் என தனது நேரத்தை செலவழித்து வருகிறார், இதுதொடர்பான புதுப்பிப்புகளையும் அவர் தனது சமூக ஊடக கணக்குகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

READ | மீண்டும் உருவாகும் ‘அவள் அப்படித்தான்’; ஸ்ருதி, சிம்பு மற்றும் துல்கர் உடன் பேச்சுவார்த்தை!...

தமிழ் திரைப்படங்களை தவிர தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களிலும் ஸ்ருதி பிரபலமாகியுள்ளார். ஸ்ருதி பாலிவுட்டில் 2000-ஆம் ஆண்டில் "லக்" படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் அவர் "தில் தோ பச்சா ஹை ஜி", "ராமையா வாஸ்தவையா" மற்றும் "பெஹன் ஹோகி தேரி" போன்ற இந்தி படங்களின் மூலம் பிரபலமாகினார்.

தெலுங்கில் அவர் "கபார் சிங்", "எவடு" , "வேனு ஸ்ரீராம்", "கொரட்டுல சிவா" போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து அவர் அடுத்து தெலுங்கு திரைப்படமான "கிராக்" திரைப்படம் மூலம் தனது தெலுங்கு ரசிகர்களுக்கு பெருந்திரையில் காட்சியளிப்பார் என தெரிகிறது.