Bigg Boss Tamil 7: ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 7! போட்டியாளர்கள் யார் யார்?

Bigg Boss Tamil 7: விஜய் டிவியில் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பு இதுவரை ஆறு வெற்றிகரமான சீசன்களைக் கண்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 26, 2023, 11:04 AM IST
  • 'பிக் பாஸ் தமிழ் 7' நிகழ்ச்சிக்கான ஆடிஷன்கள் நடைபெற்று வருகிறது.
  • மகபா ஆனந்த் மற்றும் கேபிஒய் சரத் உள்ளிட்டவர்கள் இருப்பதாக தகவல்.
  • இந்த சீசனையும் உலக நாயகனே தொகுத்து வழங்க உள்ளார்.
Bigg Boss Tamil 7: ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 7! போட்டியாளர்கள் யார் யார்? title=

Bigg Boss Tamil 7: பல மொழிகளில் பிக் பாஸ் வெற்றிகரமான நிகழ்ச்சியாக உள்ளது, தமிழ் மொழியில் உலகநாயகன் கமல்ஹாசன் அனைத்து பதிப்புகளுக்கும் தொகுப்பாளராக பணியாற்றிய நிலையில், வரவிருக்கும் 7வது சீசனுக்கும் அவரே தொகுப்பாளராக இருப்பார் என்பதுதான் முக்கிய தகவல் ஆகும். கடந்த 6 சீசன்களிலும் பல்வேறு முக்கிய பிரபலங்கள் பங்கேற்றேனர், மேலும் பிக்பாஸ்சில் பங்கேற்ற பிறகு பிரபலமான பலர் உள்ளனர். பிக் பாஸ்-ல் பங்கேற்ற பலரும் தற்போது அவரவர் துறையில் மிகவும் பிசியாக வளம் வருகின்றர். பலருக்கு இந்த நிகழ்ச்சி தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மிக பெரிய திரைப்படங்களில் நடித்து தங்களது திறமைகளை முழுமையாக வெளிகாட்டவும் இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவியுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: குழந்தை கெட்-அப்பில் குடும்பத்துடன் கும்மாளம் போடும் ரோபோ சங்கர்..!

இதில் கவின், லாஸ்லியா, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்ற சீசன் 3 பலருக்கும் விருப்பமான சீசனாக இருந்தது. இந்த சீசனுக்கு பின்னர் கவின் பல வெற்றி திரைப்படங்களையும் தொடர்ந்து கொடுத்து வருகிறார். அதே போல் சாண்டி மாஸ்டர் தற்போது வெளியாகும் அனைத்து பெரிய படங்களிலும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வெற்றிகரமாக வளம் வருகிறார். இதேபோல் முதல் சீசனில் வந்த நடிகையான ஓவியா பல இளைஞர்களின் மனம் கவர்ந்தவராக இருந்தார்.  தற்போது சென்னையில் உள்ள வழக்கமான நட்சத்திர ஹோட்டலில் 'பிக் பாஸ் தமிழ் 7' நிகழ்ச்சிக்கான ஆடிஷன்கள் நடைபெற்று வருவதாக ஹாட் நியூஸ் வந்துள்ளது. நடிகை உமா ரியாஸ் கான், தொகுப்பாளர்கள் பாவனா மற்றும் மகபா ஆனந்த் மற்றும் கேபிஒய் சரத் ஆகியோர் தணிக்கையில் காணப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உமா ரியாஸ் ஏற்கனவே விஜய் டிவியின் மற்றொரு பிரபலமான ரியாலிட்டி ஷோவான 'குக் வித் கோமாலி'யில் பங்கேற்றுள்ளார். தற்செயலாக அவரது ஒரே மகன் ஷாரிக் ஏற்கனவே 'பிக் பாஸ் 2' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

வெளியான தகவலின் படி சர்ச்சைக்குரிய நடிகை ரேகா நாயரும் அங்கு இருந்ததாகவும், நிகழ்ச்சியில் ஒரு இடத்தை பதிவு செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றன. நடிகை பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்திற்காக நிர்வாணமாகச் சென்று, தனக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததற்காக நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனுடன் தைரியமாக சாலையோரம் பேசியதற்க்கு திரையில் பரபரப்பை ஏற்படுத்தினார். இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ள 'பிக் பாஸ் 7' நிகழ்ச்சியில் இந்த சுவாரஸ்யமான நபர்களில் யார் இணைவார்கள் என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்.

கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்துள்ளார். இதன் பிறகு வினோத், மணிரத்னம், பிரபாஸுடன் ப்ராஜெக்ட் கே உள்ளிட்ட முக்கியமான படங்களில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உள்ளார்.  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2024 பாராளுமன்ற தேர்தலில் கமல் கோவை தொகுதியில் வேட்பாளராக களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  தென்னிந்தியாவின் மிகவும் பிஸியான நடிகராக கமல் தற்போது உள்ளார்.

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா..? செம ஷாக்கில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News