விஜய் படத்தால் திரையரங்கிற்கு அபராதம் விதிப்பு!

விஜய் நடித்த பிகில் படத்திற்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்ததாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 22, 2022, 03:55 PM IST
  • பிகில் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பு.
  • திரையரங்கிற்கு அபராதம் விதித்து உத்தரவு.
  • சம்பந்தப்பட்டவருக்கு அபராத தொகையை வழங்க உத்தரவு.
விஜய் படத்தால் திரையரங்கிற்கு அபராதம் விதிப்பு! title=

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்த பிகில் திரைப்படம் 2019ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் திரையரங்கில் வெளியானது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், விஜய் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.  இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்று இருந்தது.  அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

மேலும் படிக்க | இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் 5 திரைப்படங்கள்!

இந்நிலையில் இப்படத்திற்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்ததாக கோபி கிருஷ்ணா திரையரங்கிற்கு  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  கோ. தேவராஜன் தொடர்ந்த வழக்கில் சென்னை மாவட்ட நுகர்வோர் ஆணையம் அபராதத்தை விதித்துள்ளது.  2019 ஆம் ஆண்டு இரண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி சென்னை அயனாவரத்தில் உள்ள கோபிகிருஷ்ணா திரையரங்கத்தில் பிகில் படத்திற்கு 223 ரூபாய் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அரசாங்கம் நிர்ணயித்த தொகையை விட 100 ரூபாய் அதிகமாக வசூலித்ததாக தேவராஜன் அப்போது நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கிற்கு தற்போது சென்னை மாவட்ட நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

gopi

கூடுதலாக வசூல் செய்யப்பட்ட ரூபாய் 100 மற்றும் மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக ரூபாய் 5000 மற்றும் இந்த வழக்கு சம்பந்தமான செலவிற்கு ரூபாய் 2000 சேர்த்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  மேலும் அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்த தொகையை தேவராஜன் இடம் ஒப்படைக்குமாறும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | என்னுடைய அடுத்த படம் இப்படித்தான் இருக்கும் - லோகேஷ் கனகராஜ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News