கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு சென்னையில் மிகப்பெரிய அளவில் இளையராஜாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. சென்னை தீவு திடலில் மிகுந்த போலீஸ் பாதுகாப்புடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு ஒரு லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம், 10 ஆயிரம், ஐந்தாயிரம், ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பொதுப்போக்குவரத்தை மாற்றி அமைக்கும் அளவிற்கு கூட்டம் நிரம்பி இருந்தது. இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியை காண அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
மேலும் படிக்க | ஐஸ்வர்யா தோழியா? தனுஷ் வாழ்த்தால் வெடித்த சர்ச்சை
இந்த நிகழ்ச்சியில் தனுஷ், கங்கை அமரன், பிரேம்ஜி, தேவி ஸ்ரீ பிரசாத், யுவன் சங்கர் ராஜா போன்றோர் கலந்து கொண்டனர். இசை நிகழ்ச்சியில் இளையராஜா வள்ளி படத்தில் இருந்து என்னுளே என்ற பாடலை பாடினார். பாடல் முடிந்த பிறகு தனுஷை அழைத்து இந்த பாடலுக்கு உன் மாமனார் தான் காரணமா என்று சுட்டி காட்டினார். மேடையின் கீழே இருந்த தனுஷ் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார். சமீபத்தில் தனது மனைவியும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ். இந்நிலையில் ரஜினியை தனது மாமனார் என்று இளையராஜா கூறியதால் மிகுந்த சங்கடத்திற்கு ஆளானார் தனுஷ்.
மேலும், நிகழ்ச்சிக்கு தனது இரண்டு மகன்களையும் அழைத்து வந்து இருந்தார் தனுஷ். அவர்களிடம் இளையராஜா பாட்டு நன்றாக இருந்ததா? உங்க தாத்தாவிடம் போய் சொல்விங்களா? என்று கேட்டார். இது தனுஷை மேற்கொண்டும் சங்கடமாக்கியது. பிறகு தனுஷ், இளையராஜா இணைந்து மேடையில் ஒன்றாக பாட்டு பாடினர். தனுஷ் தனது மகன்களை நினைத்து தானே எழுதிய பாடலை இளையராஜா முன்பு பாடி காட்டினார். வெங்கட் பிரபு தம்பி பிரேம்ஜியும் ஒரு பாடல் பாடினார், அவரையும் இளையராஜா பங்கமாய் கலாய்த்து அனுப்பினார்.
மேலும் படிக்க | மாறனை தொடர்ந்து தனுஷின் அடுத்த படம் தியேட்டரா, ஓடிடியா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR