சீதாவின் மீது தண்ணீர் ஊற்றியவர்களை லெஃப்ட் & ரைட் வாங்கும் மீரா செய்த காரியம்!

Seetha Raman Latest Episode Update: அடுத்தடுத்து சீதாவை டார்ச்சர் செய்யும் மகா.. மீரா கொடுத்த ஐடியா - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 30, 2023, 11:15 AM IST
  • சீதாவின் மீது தண்ணீர் ஊற்றிய மூவர்
  • மூவரையும் லெஃப்ட் & ரைட் வாங்கும் மீரா செய்த காரியம்
  • கோபத்தில் கொந்தளிக்கும் மீரா
சீதாவின் மீது தண்ணீர் ஊற்றியவர்களை லெஃப்ட் & ரைட் வாங்கும் மீரா செய்த காரியம்! title=

சீதா ராமன் சீரியல் அப்டேட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை சீதா ராமன் சீரியல் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கார்த்திகை தீபம், மாரி, அண்ணா, சந்தியா ராகம் போன்ற தொடர்களும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளன. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன், இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தூங்கி கொண்டிருந்த சீதாவின் மீது தண்ணீரை ஊற்றி எழுப்பி கோலம் போட சொல்லி மகா டார்ச்சர் செய்ய தொடங்கிய நிலையில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

கோலம் போட சீதா மறுக்க, நீ கோலம் போடுற வரைக்கும் செக்யூரிட்டிக்கு அடி விழும் என்று சொல்லும் சீதா, செக்யூரிட்டி ஆளை அடிக்க தொடங்க வேறு வழியின்று சீதா கோலம் போடுகிறாள். சமையல்காரி செல்வி இந்த விஷயத்தை மீராவுக்கு தெரியப்படுகிறாள். 

மேலும் படிக்க | ஷக்திக்கு ஷாக் கொடுத்த ரங்கநாயகி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

இதனால் அதிர்ச்சி அடையும் மீரா வீட்டிற்கு வந்து சீதாவின் மீது தண்ணீர் ஊற்றிய மூவரையும் லெப் அண்ட் ரைட் வாங்குகிறாள். அதன்பிறகு மீரா கோபத்தில், அர்ச்சனா, மகாவிடம் சண்டை போடுகிறாள்.

இந்த நிலையில் சீதாராமன் சீரியலில், சீதாவுக்கு ஆறுதல் சொல்லி இந்த விஷயத்தை ராமுக்கு சொல்லி விடலாம் என்று சொல்லும் மீராவின் வார்த்தை ஏற்றுக் கொள்ளமறுக்கும் சீதா வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்கிறாள். 

seetharaman

மீரா எதுவாக இருந்தாலும் போன் பண்ணு என்று சொல்லி வீட்டிற்கு கிளம்பிய பிறகு இரவு சாப்பிடும் போது மீண்டும் சீதாவை டார்ச்சர் செய்து உணவு பரிமாற வைக்கின்றனர். சீதா சாப்பிட சாப்பாடு வைக்காமல் குப்பை தொட்டியில் கொட்டி விடுகின்றனர். இதனால் சீதா பசியில் துடிக்க ராம் போன் செய்யும் போது உண்மையை மறைத்து விடுகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சீதாராமன் அப்டேட்: மரண பயத்தில் மகா... ராஜசேகர் கொடுத்த திடீர் ஷாக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News