உதயநிதிக்காக இறங்கி வந்த கமல் மற்றும் ரஜினி! ஏன் தெரியுமா?

'மாமன்னன்' படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 16, 2023, 01:41 PM IST
  • ஜூன்-1ம் தேதி 'மாமன்னன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கும் என்று கூறப்படுகிறது.
  • 'மாமன்னன்' படத்தை ஜூன் 29ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
  • 'மாமன்னன்' படத்தில் வடிவேலு தனது சொந்த குரலில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
உதயநிதிக்காக இறங்கி வந்த கமல் மற்றும் ரஜினி! ஏன் தெரியுமா? title=

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'.  உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.  ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர் ஒன்றில் வடிவேலு அரசியல்வாதி போல வெள்ளை வேஷ்டி சட்டை போட்டுகொண்டு நிற்க, அவருக்கு எதிர்முனையில் உதயநிதி ஸ்டாலின் கோட் சூட் மாட்டிக்கொண்டு கெத்தாக நிற்பது போன்று இருந்த புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது.  அதனை தொடர்ந்து கையில் துப்பாக்கியுடன் ஆக்கிரோஷமாக வடிவேலு அமர்ந்து இருக்க, அவருக்கு அருகில் கையில் கத்தியுடன் உதயநிதி ஆக்கிரஷோமாக அமர்ந்து இருக்கும் போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலானது.  

மேலும் படிக்க | மனோபாலா குறித்த ஃப்ளேஷ் பேக்கை பகிர்ந்து கொண்ட மன்சூர் அலிகான்

 

'மாமன்னன்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் மிகப்பெரிய அளவில் நடைபெறவிருக்கிறது.  ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் 'மாமன்னன்' படத்தை ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவை வரும் ஜூன்-1ம் தேதியன்று சென்னையில் நடத்த படத்தின் தயாரிப்பு குழு திட்டமிட்டு இருப்பதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கிறது.  'மாமன்னன்' படத்தின் பிரம்மாண்டமான இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கூடிய விரைவில் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பினை பட தயாரிப்புக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இறுதியாக ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்-2' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்துகொண்ட நிலையில் அடுத்ததாக இருவரும் உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

'மாமன்னன்' படத்தில் வடிவேலு இதுவரை இல்லாத அளவில் ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார், படத்தில் வடிவேலுவின் கெட்டப்பை பார்த்த பிறகு வடிவேலுவின் புதிய அவதாரத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  'மாமன்னன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு தனது சொந்த குரலில் ஒரு பாடலை பாடியுள்ளார்.  ஏற்கனவே பல படங்களில் தனது சொந்த குரலில் பாடலை பாடியிருக்கிறார், இவர் குரலில் பாடிய சில பாடல்களுக்கு ரசிகர்களிடம் இன்றளவும் வரவேற்பு இருந்து வருகிறது.  இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், எடிட்டராக செல்வா ஆர்.கே, கலை இயக்குநராக குமார் கங்கப்பன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.  மாமன்னன் படம் தான் உதயநிதி நடிக்கும் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த படத்துடன் உதயநிதி ஸ்டாலின் நடிப்பை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்யவிருக்கிறார்.

மேலும் படிக்க | பெயரை மாற்றிய தி கேரளா ஸ்டோரி நடிகை! அவரே சொன்ன காரணம்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News