பிச்சைக்காரன் 2 ஓடிடியில் வெளியீடு..வேறு எந்தெந்த படங்களை வீக்-எண்டில் பார்க்கலாம்?

OTT Release This Week: இந்த வாரம் ஓடிடி தளங்களில் பல படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jun 15, 2023, 04:00 PM IST
  • பிச்சைக்காரன் 2 ஓடிடியில் வெளியாகவுள்ளது.
  • விஜய் ஆண்டனியின் இரண்டு படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன.
  • கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல படங்கள் வெளியாகின்றன.
பிச்சைக்காரன் 2 ஓடிடியில் வெளியீடு..வேறு எந்தெந்த படங்களை வீக்-எண்டில் பார்க்கலாம்?  title=

OTT Releases This Week: விஜய் ஆண்டனி, சாந்தனு, உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்கள் இந்த வாரத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அவை என்னென்ன படங்கள் என்பதையும் அதை எந்தெந்த தளத்தில் பார்க்கலாம் என்ற விவரத்தையும் இங்கே பார்க்கலாம் வாங்க. 

பிச்சைக்காரன் 2: 

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. இந்த படத்தினை விஜய் ஆண்டனியே டைரக்டு செய்து ஹீரோவகவும் நடித்திருந்தார். முதல் படம் அளவிற்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றாலும் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம், வரும் ஜூன் 18ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. 

தமிழரசன்:

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியிருந்த இன்னொரு படம், தமிழரசன். இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் ஜீ 5 தளத்தில் ஜூன் 16ஆம் தேதியன்று வெளியாகிறது. 

மேலும் படிக்க | ‘மாமன்னன்’ டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியானது அட்டகாசமான அப்டேட்

ராவணக்கோட்டம்:

சாந்தனு நடிப்பில் வெளிவந்து பெரும் சர்ச்சையை கிளப்பிய படம், ராவணக்கோட்டம். கிராமத்து கதையாக, ஜனரஞ்சக வகையில் உருவாகியிருந்த படம் இது. இந்த படம், ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகிறது. 

சியா: 

இந்தி மொழியில் உருவாகியுள்ள படம், சியா. ஒரு பெண்ணை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகளை தூண்டி வருகிறது. இப்படம் ஜீ 5 தளத்தில் ஜூன் 16ஆம் தேதியன்று வெளியாகிறது. 

எக்ஸ்ட்ராக்‌ஷன் 2:

மார்வல் ஹீரோ க்ரிஸ் ஹெம்ஸ்வர்த் நடித்துள்ள படம், எக்ஸ்ட்ராக்‌ஷன் 2. இந்த படத்தின் முதல் பாகம் வெளியானதில் இருந்து இதற்கான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்த படம் நெட்ஃப்ளிக்ஸில் வரும் 16ஆம் தேதியன்று வெளியாகிறது. 

காந்தஹர்:

போர்கள கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், காந்தஹர். ஆங்கில படமான இது, அமேசான் ப்ரைம் தளத்தில் வரும் நாளை வெளியாகிறது. 

தி மேன் ஃப்ரம் டோரெண்டோ:

கெவின் ஹார்ட், வூடி ஹார்லசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் தி மேன் ஃப்ரம் டோரெண்டோ. நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள இந்த ப்டம், நாளை ஜீ 5 தளத்தில் வெளியாகிறது. இதை ரெண்ட் கொடுத்து கண்டுகளிக்கலாம். 

தி வில்லேஜ்: 

ஜப்பான் மொழியில் உருவாகியுள்ள படம், தி வில்லேஜ். போர் அடிக்காத வகையில் பிணையப்பட்டுள்ள கதை இது. இந்த படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. 

இன்னும் பல..

மேற்கூறிய படங்கள் தவிர பல படங்களும் தொடர்களும் வெளியாகின்றன. 

ஐ லவ் யூ-ஜியோ சினிமா
சார்லஸ் எண்டர்ப்ரைசஸ்-ப்ரைம்
வாமனன்-மனோரமா மேக்ஸ்
ஜீரா கர்தா-ப்ரைம்
தாரம் தீராத கொடூரம்-ப்ரைம்
கண்ணுல தெரிஞ்சினா கன்னுல முசினா-ஆஹா
ரஃபு ச்ஹக்கர் -  ஜியோ சீரிஸ்

மேலும் படிக்க | பிரபல துணை நடிகர் திடீர் மரணம்..அடக்கம் செய்யக்கூட ஆள் இல்லாத அவலம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News