Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா காதலனாக கார்த்தியை அறிமுகம் செய்ய தீபாவை ஃபேக்டரிக்கு அழைத்து சென்றிருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்திகை தீபம் சீரியலின் (Karthigai Deepam) இன்றைய எபிசோடில், அதாவது, ரம்யா தனது கேபினில் இருந்து தீபாவை கூப்பிட்டு அவன் தான் தன்னுடைய காதலன் என்று கார்த்தியை கை காட்ட தீபா பார்க்கும்போது கார்த்திக் அங்கே இல்லாமல் இருக்க வேறொருவனை பார்த்து ரம்யாவின் காதலன் என தப்பாக புரிந்து கொள்கிறாள்.
இதே நேரத்தில் செக்யூரிட்டிக்கு காசு கொடுத்து உள்ளே வந்திருந்த ஐஸ்வர்யா இங்கு நடப்பதை பார்த்து ரம்யா காதலிப்பது கார்த்தி தான் என்பதை புரிந்து கொள்கிறாள். உடனே இதை வைத்து நம்ம ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் என்று ரியாவை சந்தித்து விஷயத்தை சொல்கிறாள்.
அடுத்ததாக ரம்யா ஒரு டெண்டர்காக பிஏவை கூப்பிட்டு ஒரு அமௌன்ட் சொல்லி அதை வைத்து கொட்டேஷன் ரெடி பண்ண சொல்கிறாள். அந்த பிஏ ஆனந்துக்கு போன் போட்டு இவ்வளவு அமௌன்ட் கொட்டேஷன் கொடுத்து இருக்காங்க நீங்க அதுக்கு ஏத்த மாதிரி பார்த்து பண்ணுங்க எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துடுங்க என்று சொல்கிறான்.
மேலும் படிக்க | கிச்சனில் ரொமான்ஸ் செய்யும் எழில்-இந்து ஜோடி! கடுப்பான மனோகரியின் கொலைத் திட்டம்!
அதைத்தொடர்ந்து ரம்யா அவசர அவசரமாக கார்த்தியை கூப்பிட்டுக் கொண்டு டென்டருக்கு கிளம்ப கார் ஸ்டார்ட் ஆகாத நிலையில் கார்த்திக் பைக்ல போலாமா என்று கேட்டு இருவரும் பைக்கில் கிளம்பி செல்கின்றனர். இதைப் பார்த்த பெண் ஒருவர் தீபாவுக்கு போன் போட்டு கார்த்தி ஒரு பொண்ணோட செல்வதாக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | தனுஷின் ராயன் ஆடியோ லான்ச் குறித்து வெளியான மாஸ் அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ