Social Media-ல இதெல்லாம் சகஜமப்பா, Serious-சா எடுக்காதீங்க’: கவுண்டமணி நலம், வதந்திகள் பொய்!

நகைச்சுவை நடிகர் கௌண்டமணியின் உடல்நிலை குறித்து இணையத்தில் பல வதந்திகள் வந்துள்ளன. ஆனால் இந்த வதந்திகள் எல்லாம் முற்றியும் பொய்யானவை. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 23, 2020, 08:14 PM IST
  • நகைச்சுவை நடிகர் கௌண்டமணியின் உடல்நிலை குறித்த பல வதந்திகள் பரவி வருகின்றன.
  • இவை அனைத்தும் பொய் என நடிகரின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
  • இப்படிப்பட்ட வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என எச்சரிக்கை.
Social Media-ல இதெல்லாம் சகஜமப்பா, Serious-சா எடுக்காதீங்க’: கவுண்டமணி நலம், வதந்திகள் பொய்! title=

கௌண்டமணி தமிழ் திரையுலகின் (Tamil Cinema) மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகராவார். பல ஆண்டுகளுக்கு ரசிகர்களை அவரவர் பிரச்சனைகளை மறந்து சிரிக்க வைத்த பெருமை அவருக்கு உண்டு.

சில நாட்களாக கவுண்டமணியின் (Actor Goundamani) உடல்நிலை குறித்த பல வதந்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் நிற்பதாகத் தெரியவில்லை. சமீபத்தில் ஒரு யூடியூப் பயனர் (YouTube User) கௌண்டமணி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்று கூறியிருந்தார்.

ஆனால், இப்போது இந்த அனைத்து வதந்திகளும் பொய்யானவை என்று நடிகருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

"நகைச்சுவை நடிகர் கௌண்டமணியின் உடல்நிலை குறித்து இணையத்தில் பல வதந்திகள் வந்துள்ளன. ஆனால் இந்த வதந்திகள் எல்லாம் முற்றியும் பொய்யானவை. அவர் மிகவும் நன்றாக இருக்கிறார். அவர் இப்போதுதான் ஒரு புதிய படத்திலும் கையெழுத்திட்டுள்ளார். YouTube-ல் கௌண்டமணி குறித்த தவறான தகவலை பரப்பிய நபர் அதை அகற்றவில்லை என்றால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று நடிகரின் ஊடக பிரதிநிதி கூறினார்.

ALSO READ: நடிகர் சூர்யாவின் “சூரரை போற்று” பட வெளியிட்டில் நீடிக்கும் சிக்கல்..!!!

முன்னரும் கௌண்டமணியைப் பற்றி இப்படிப்பட்ட வதந்திகள் வெளிவந்துள்ளன. அப்போது அவர், தன்னைப் பற்றி வதந்திகளை பரப்பும் இந்த நல்ல உள்ளங்கள் யார் என்று தனக்குத் தெரியாது என்றும், அத்தகைய செயல்களிலிருந்து அவர்களுக்கு என்ன கிடைக்கும் என தனக்கு புரியவில்லை என்றும் கூறியிருந்தார்.

இப்படிப்பட்ட வதந்திகள், மற்றொரு பிரபல நகைச்சுவை நடிகரான செந்திலைப் (Actor Senthil) பற்றியும் வந்துள்ளன. தன்னைப் பற்றிய தவறான செய்திகளைப் பரப்பியவர்களுக்கு எதிராக அவர் சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: வாரத்தில் 2 நாள் Netflix இலவசமாக பார்க்கலாம்! இந்த சலுகையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News