பிக்பாஸ் சீசனுக்குப் பிறகு திரைத்துறையில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். சிவகார்த்திகேயன் படத்தை தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விகரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தையும் ராஜ்கமல் நிறுவனமே தயாரித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற படத்தின் சூட்டிங் நிறைவடைந்து, படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் விக்ரம் படம் ரிலீஸாக உள்ளது.
மேலும் படிக்க | ராஜமெளலியை நிஜமாகவே Unfollow செய்தாரா ஆலியா பட்?!- உண்மை என்ன?
இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், நரேன், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், காயத்ரி ஷங்கர், மைனா நந்தினி, அந்தோனி வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான இந்த நிறுவனம் விரைவில் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தது. என்ன அறிவிப்பாக இருக்கும்? என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், இந்த அப்டேட் கிடைத்துள்ளது. விக்ரம் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றி இருக்கும் ரெட் ஜெயண்ட் மூவீஸ், விரைவில் அதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறது.
ஏற்கனவே, நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தின் தமிழக உரிமையை ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. போனி கபூர் உதயநிதி ஸ்டாலினை நேரடியாக சந்தித்து இந்த டீலை ஓகே செய்தார். ரெட் ஜெயண்ட் வெளியிட்ட வலிமை திரைப்படம் நல்ல வசூலை பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியானது. இப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம், ஆர்ஆர்ஆர் படங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டது.
மேலும் படிக்க | மனைவியை கேலி செய்தவரை அறைந்த வில் ஸ்மித்...மவுனம் கலைத்த வில் ஸ்மித் மனைவி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR