Invisibility Cloak: ஜீபூம்பா! கேமராக்களுக்கு ஆப்பு வைக்கும் மேஜிக் ‘மாயஜால கோட்’

Invisibility Cloak: பாதுகாப்பு கேமராக்களில் இருந்து மனிதர்களை மறைக்கும் ஆடையை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர், புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் முதல் பரிசு வென்ற சீனர்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 12, 2022, 06:35 AM IST
  • மாயஜாலம் செய்யும் நவீன ஆடை
  • கேமராக்களுக்குப் போக்குக் காட்டும் ‘கோட்’
  • மாணவர்களின் புத்தாக்கம் செய்யும் மந்திரம்
Invisibility Cloak: ஜீபூம்பா! கேமராக்களுக்கு ஆப்பு வைக்கும் மேஜிக் ‘மாயஜால கோட்’ title=

உலகத்தில் இருந்து உங்களை மறைக்கும் ‘மந்திர ஆடை’ இன்னும் சில நாட்களில் விற்பனைக்கு வந்துவிடும். இந்த சிறப்பு ஆடை, உலகத்திலிருந்து மட்டுமல்ல, பாதுகாப்பு கேமராக்களிலும் இருந்து உங்களை மறைத்துவிடும். நம்ப முடியவில்லை, சாத்தியமில்லை, சும்மா கதை விடாதீங்க என சொல்லத் தோன்றுகிறதா? ஹாரி பாட்டரின் 'இன்விசிபிலிட்டி க்ளோக்' உண்மையில் ஒரு யதார்த்தமாக மாற முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றர் சீன மாணவர்கள். அறிவியல் புனைகதைகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, தங்கள் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது ஒரு மாணவர் பட்டாளம்.

குறைந்த விலையில் கிடைக்குமாறு இந்த கோட் உருவாக்கப்படும். பார்ப்பதற்கு எந்தவித வித்தியாசமும் இல்லாமல் காணப்படும் இந்த மேலாடை, செயற்கை நுண்ணறிவால் (AI) கண்காணிக்கப்படும். இதனால், இந்த கோட்டை அணிந்திருப்பவர்கள், பாதுகாப்பு கேமராக்களில் சிக்கமாட்டார்கள். 

மந்திர ஜாலக் கதைகளிலும், விட்டாலாச்சர்யா படங்களில் வரும் இந்த உத்திகள்  உண்மையில் ஒரு யதார்த்தமாக மாற முடியும் என்பது ஆச்சரியம் அளிக்கும் உண்மையாக மாறிவிட்டது.  இந்தச் செய்தியை, சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ப்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. சீனாவில் பட்டப்படிப்பு படித்துவரும் மாணவர்களினி இந்த இன்விஸ் டிஃபென்ஸ் (InvisDefense) கோட், மனிதர்களின் கண்களுக்குத் தெரியும், ஆனால் அதனுள் தொழில்நுட்பம் மாயமாய் மறைந்திருக்கிறது.

மேலும் படைக்க | Zombie Virus: 48500 ஆண்டு பழைய வைரஸ்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் விஞ்ஞானிகள்

பகலில் கேமராக்களைக் குருடாக்கும் இந்த InvisDefense, இரவில் வெப்ப சமிக்ஞைகளை வெளியிடுகிறது. ஒரு போட்டியில் கலந்துக் கொண்ட சீன மாணவர்களின் புத்தாக்கமான இந்த மாய மேலாடைக்கு, போட்டி ஒன்றில் முதல் பரிசு கிடைத்துள்ளது. Huawei Technologies Co நிதியுதவி செய்த படைப்புப் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

மாயஜாலத்தின் பின்னணியில் உள்ள அறிவியல்

வுஹான் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பள்ளியின் பேராசிரியர் வாங் ஜெங் மாணவர்களின் படைப்பாக்கத்தைப் பற்றி விரிவாக சொல்கிறார். “இப்போதெல்லாம், பல கண்காணிப்பு சாதனங்கள் மனித உடல்களை சுலபமாக கண்டறிந்துவிடுகின்றன. சாலையில் உள்ள கேமராக்கள் பாதசாரிகளைக் கண்டறியும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஸ்மார்ட் கார்கள் பாதசாரிகள், சாலைகள் மற்றும் தடைகளை அடையாளம் காண முடியும். எங்கள் இன்விஸ் டிஃபென்ஸ் ஆடை அணிந்திருக்கும்போது, கேமராவில் படம் பதியும், ஆனால் நீங்கள் மனிதரா என்பதை அது கண்டறிய முடியாது”.

மேலும் படைக்க | AMG133: உடல் இளைக்க இந்த மருந்தே போதுமா? எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்

பகலில், மனித உடல்களைக் கண்டறிய கேமராக்களால் விளிம்பு அங்கீகாரம் மற்றும் இயக்க அங்கீகாரம் (contour recognition and motion recognition) பயன்படுத்தப்படுகிறது. InvisDefense இன் மேற்பரப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உருமறைப்பு வடிவத்தால் மூடப்பட்டிருக்கும், இது இயந்திர பார்வையின் அங்கீகார வழிமுறையில் குறுக்கிடுகிறது மற்றும் கேமராவை திறம்பட குருடாக்குகிறது, இதனால் கேமராக்களின் மனிதனை அடையாளம் காணும் நுட்பம் சரியாக வேலை செய்யாது.  

இரவில், மனித உடல்களைக் கண்காணிக்க கேமராக்களால் அகச்சிவப்பு வெப்ப இமேஜிங் பயன்படுத்தப்படுகிறது. புத்தாக்கமான InvisDefense கோட்டின் உள் மேற்பரப்பில் ஒழுங்கற்ற வடிவ வெப்பநிலை-கட்டுப்பாட்டு தொகுதிகள் உள்ளன, அவை வெப்பநிலையின் அசாதாரண வடிவத்தை உருவாக்கி கேமராவை குழப்பும் என்பதால், இரவிலும் கேமராக்கள் ஏமாந்து போகும்.

"உருமறைப்பு வடிவத்தின் சமநிலை தான் மிகவும் கடினமான பகுதியாக இருந்தது. இயந்திர பார்வையில் தலையிட பிரகாசமான படங்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், கணினி பார்வையை முடக்கக்கூடிய குறைவான வெளிப்படையான வடிவங்களை வடிவமைக்க நாங்கள் அல்காரிதங்களைப் பயன்படுத்தினோம்" என்று இந்த புத்தாக்கப் படைப்பில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவரும் PhD மாணவருமான வெய் ஹுய் கூறினார். நூற்றுக்கணக்கான வடிவங்களை உருவாக்கி, அவை பரிசோதிக்கப்பட்டு, இறுதியில் கேமராவின் கண்களை மறைக்கும் மாயஜால தொழில்நுட்பத்தை சீன மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.  

மேலும் படிக்க | Nostradamus அதிகாரத்துக்கு உலை வைக்கும்! வேலைவாய்ப்பு குறையும்! அச்சமூட்டும் கணிப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News