‘என் குட்டிய விட்டுடு’: பாம்புடன் சண்டை போட்ட கங்காரு, இணையத்தை அழ வைத்த வைரல் வீடியோ

Snake Viral Video: மனதை பதபதைக்க வைக்கும் ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. பாம்பின் பிடியில் இருந்து தன் குட்டியை காப்பாற்ற போராடும் கங்காருவின் வீடியோ இது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 12, 2022, 07:24 PM IST
  • குட்டி கங்காருவை பிடித்த மலைப்பாம்பு.
  • பாம்புடன் சண்டை போட்ட தாய் கங்காரு.
  • மனதை இளக வைக்கும் வைரல் வீடியோ.
‘என் குட்டிய விட்டுடு’: பாம்புடன் சண்டை போட்ட கங்காரு, இணையத்தை அழ வைத்த வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத, காண்பதற்கு மிக அரிதான பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம். இணையத்தில் ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களே பெரும்பாலும் அதிகமாக இருக்கின்றன. சில நேரங்களில் இந்த வீடியோக்களை பார்ப்பது வேடிக்கையாகவும், சில சமயங்களில் மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கின்றது. சில வீடியோக்கள் மிக பரிதாபமாகவும் உள்ளன. இவை விலங்குகளின் வீடியோக்களாக இருந்தாலும் இவற்றிலிருந்து நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறோம். 

சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவில், பாம்புக்கும் பெண் கங்காருவுக்கும் இடையே கடும் சண்டை நடப்பதைக் காண முடிகின்றது. இந்த வீடியோவில் தாய் கங்காருவின் பரிசுத்தமான அன்பையும் காண முடிகின்றது. தாய் என்பவளின் இயல்பு ஒரே மாதிரிதான் இருக்கும். அது மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, அம்மா அம்மாதான்!! தங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து என்றால், தாயால் தாங்கிக்கொள்ள முடியாது. குழந்தையை காப்பாற்ற தனது புத்திசாலித்தனத்தை, தனது ஆற்றலை, தனது துணிவை என அனைத்தையும் பயன்படுத்தி விடுவார். 

குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் நிகழ்வு ஒன்று நடந்தால், கண்டிப்பாக தாய்மார்கள் சூப்பர் ஹீரோக்களாக மாறிவிடுவார்கள். எப்படியும் தங்கள் குழந்தையை காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற எண்ணமே தாய்மார்களுக்கு மேலோங்கி இருக்கும். இந்த வீடியோவில் தாய் கங்காருவின் அன்பும் தைரியமும் விடாமுயற்சியும் காணக்கிடைக்கின்றது. வைரலாகும் இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | அம்மானா சும்மாவா? குட்டியை காக்க சூப்பரா யோசித்த அம்மா குரங்கின் வைரல் வீடியோ 

இந்த வீடியோவில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று குட்டி கங்காருவை பிடித்துள்ளதை காண முடிகின்றது. குட்டி கங்காருவால் மலைப்பாம்பின் பிடியில் இருந்து வெளியேற முடியவில்லை. மலைப்பாம்பு கங்காருவை சுற்றி வளைத்து உயிரை பறிக்க தயாராக இருப்பதை வீடியோவில் காண்கிறோம். 

பெண் கங்காருவின் பாசம்

இந்த நிலையில் தனது குட்டி மலைப்பாம்பின் பிடியில் சிக்கியிருப்பதை பார்த்த தாய் கங்காருவால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தாய் கங்காரு தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் மலைப்பாம்புடன் போராட முடிவு செய்கிறது. தாய் கங்காரு மலைப்பாம்பை இரண்டு கைகளாலும் தன்னால் முடிந்த வரை தாக்கி குட்டி கங்காருவை மீட்க முயற்சிப்பதை காண முடிகின்றது. 

வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் Wildtrails.in என்ற கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். சுமார் 2000 ஆயிரம் பேர் இந்த வீடியோவையும் லைக் செய்துள்ளனர். தாய் கங்காருவின் துணிச்சலையும் பாசத்தையும் இணையவாசிகள் பாராட்டி வருகிறார்கள். பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க | 'போன் வேணும்...' அடம் பிடிக்கும் குட்டி, அடக்கும் அம்மா குரங்கு: கியூட் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News