கத்தியை தீட்டி பட்டையை கிளப்பும் கேங்க்ஸ்டர் குரங்கு: விக்கித்து போன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Funny Monkey Video: இப்படி ஒரு குரங்கை நீங்கள் பார்த்திருக்க முடியாது. கத்தியை பாறையில் பட்டைத் தீட்டும் குரங்கின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 4, 2023, 02:57 PM IST
  • குரங்குகளின் ஆர்வமும், விளையாட்டுத்தனமும், கணிக்க முடியாத அவற்றின் இயல்பும்தான் அவற்றை அனைவருக்கும் பிடிப்பதற்கு காரணம்.
  • அவை செய்யும் பல செயல்கள் மிகவும் வேடிக்கையாக இருக்கின்றன.
  • மனிதர்களை அப்படியே காப்பி அடிப்பதில் குரங்களை வேறு எந்த மிருகத்தாலும் மிஞ்ச முடியாது.
கத்தியை தீட்டி பட்டையை கிளப்பும் கேங்க்ஸ்டர் குரங்கு: விக்கித்து போன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகளின் ஆர்வமும், விளையாட்டுத்தனமும், கணிக்க முடியாத அவற்றின் இயல்பும்தான் அவற்றை அனைவருக்கும் பிடிப்பதற்கு காரணம். அவை செய்யும் பல செயல்கள் மிகவும் வேடிக்கையாக இருக்கின்றன. மனிதர்களை அப்படியே காப்பி அடிப்பதில் குரங்களை வேறு எந்த மிருகத்தாலும் மிஞ்ச முடியாது. மனிதர்கள் செய்யும் பல செயல்களை குரங்குகளும் அவ்வப்போது செய்து பார்க்கின்றன. குரங்குகளின் பல வீடியோக்கள் தினமும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

தற்போதும் ஒரு குரங்கின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தால் நம் கண்களையே நம்மால் நம்ப முடியாது. இந்த வீடியோவில் குரங்கு ஒரு கத்தியைத் தீட்டி கூர்மைப்படுத்துவதைக் காண முடிகின்றது. இது அவ்வளவு எளிதில் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும். 

மேலும் படிக்க | பெண்ணை சுற்றிக்கொண்டு படம் எடுத்த நாகப்பாம்பு: திகிலூட்டும் வைரல் வீடியோ

குரங்கு கத்தியை ஒரு பாறையில் தேய்த்து, தண்ணீரில் கழுவி அதை கூர்மையாக்குவதை வீடியோவில் காண முடிகிறது. மனிதர்கள் இப்படி செய்வதை பார்த்து இந்த குரங்கு அவர்களை நகலெடுக்கிறதா என்பது தெளிவாக இல்லை என்றாலும், அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. வீடியோவைப் பகிரும் போது ஐபிஎஸ் அதிகாரி ராமாயணக் குறிப்பை இதனுடன் சேர்த்து எழுதியுள்ளார். "ராவணனின் இலங்கை மீது தாக்குதல் நடத்தும் முன் வானர சேனை இப்படித்தான் தாயாரானது’ என அவர் குறிப்பிட்டுள்ளார். 

குரங்கு கத்தியைத் தீட்டும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் ஷர்மா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதற்கு 8 ஆயிரத்துக்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். சிலர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிலருக்கு இது வேடிக்கையாக இருந்தது. ‘பாத்துப்பா.. குரங்கு கத்தியோட வேட்டையாட கிளம்பிடுச்சு’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். 

மேலும் படிக்க | ஆசிரியரிடம் ஒரு மாணவன் செய்ய வேண்டிய செயலா? வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News